திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பல நூறு கோடிக்கு அந்த சேனலை வாங்கும் விஜய்.. அரசியல் ஆடுபுலி ஆட்டம்னா இப்படி தான் இருக்கணும்

Thalapathy Vijay: தளபதி விஜய் அரசியலில் நுழைவது என்பது கிட்டத்தட்ட உறுதியான விஷயமாக ஆகிவிட்டது. அவர் வாயை திறந்து இதுவரைக்கும் அதைப்பற்றி பேசவில்லை என்றாலும், அவருடைய அடுத்தடுத்த நகர்வுகள் அரசியலை நோக்கி தான் இருக்கிறது. படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் விஜய், தன்னுடைய கட்சி நிர்வாகிகளின் மூலம் அரசியலுக்கும் திட்டம் போட்டு வருகிறார்.

சமீபத்தில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்று இருக்கிறது. இதில் விஜய் சார்பில் அவருடைய மக்கள் இயக்கத்தின் ஐடி நிர்வாகிகளுக்கு, குறிப்பிட்ட சில நிபந்தனைகளை போடப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் மூலம் அவருடைய ரசிகர்களுக்கும் இந்த நிபந்தனைகள் போடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

Also Read:லியோ 1000 கோடி வசூல் உறுதியா.? தரமான பதிலடி கொடுத்த லோகேஷ்

இப்படி அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்தி வரும் தளபதி விஜய்யின், மக்கள் இயக்கத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சமீபத்திய அப்டேட் படி கிட்டத்தட்ட நூறு கோடி பட்ஜெட் அளவில் விஜய் புதிய திட்டம் ஒன்றை தொடங்க இருக்கிறார். அதாவது அரசியலுக்கு வருவதற்கு முன்பே விஜய் தனக்கென்று ஒரு சொந்த சேனலை தொடங்குகிறார்.

தன்னுடைய கட்சி கொள்கைகள் மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக இந்த சேனல் தொடங்கப்பட இருக்கிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே இருக்கும் சேனலை விஜய் விலைக்கு வாங்குவாரா அல்லது அவராகவே சொந்த சேனலை தொடங்க இருக்கிறாரா என்று விரைவில் தெரிந்து விடும்.

Also Read:பேராசையில் தளபதி 68 சம்பளத்தில் செக் வைத்த விஜய்.. தலவிதின்னு ஏஜிஎஸ் 200 கோடி கொடுப்பதன் சூழ்ச்சி

இப்படி விஜய் தானாகவே ஒரு சொந்த சேனலை தொடங்கினால், சேட்டிலைட் தொழில்நுட்பத்தில் இருந்து, டிஷ் வரைக்கும் மொத்த செலவே ஆயிரம் கோடிக்கு மேல் ஆகிவிடும். அரசியலுக்காக விஜய் இதை துணிந்து செய்கிறார். அடுத்தடுத்து அரசியலில் களம் காண இதுபோன்று கோடிக்கணக்கில் செலவு செய்துதான் ஆக வேண்டும்.

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தளபதி விஜய் வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறாரா அல்லது நேரிடையாக சட்டமன்றத் தேர்தலில் களம் காணுவாரா என்று இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். தளபதி 68 படத்திற்குப் பிறகு விஜய்யின் அரசியல் என்ட்ரி பற்றி அறிவிப்புகள் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

Also Read:எட்ட முடியாத உயரத்தில் ரஜினி, விஜய்க்கு போட்டி அந்த நடிகர் தான்.. வெளிப்படையாக பேசிய பிரபலம்

Trending News