சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

விஜய் அடுத்து அரசியலில் எடுக்கப் போகும் முக்கிய முடிவுகள்.. அட! முதல்வன் பட ரேஞ்சுக்கு இருக்கே

Thalapathy Vijay: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்து 2026 சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கப் போவதாக அறிவித்துவிட்டார். அடிக்கடி கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தும் விஜய், இதுவரை மீடியா முன்பு ஒரு கட்சியின் தலைவராக பேச ஆரம்பிக்கவில்லை. அவர் எப்போது மௌனம் கலைப்பார் என மக்களும் காத்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம் விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக அவருக்கு தான் ஓட்டு போட வேண்டும் என ஒரு கூட்டமும், இவருக்கு ஏன் இந்த வேலை என அக்கறையோடு கோபத்தை காட்டும் ஒரு கூட்டமும் இருக்கிறது. அதே நேரத்தில் யார் அரசியலுக்கு வந்தால் என்ன எங்களுக்கு மாற்றம் நடந்தால் போதும் என எண்ணும் சாதாரண மக்களும் இருக்கிறார்கள்.

தற்போது விஜய் GOAT படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து வெற்றிமாறனுடன் தன்னுடைய 69 ஆவது படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு படங்களின் வேலைகள் முடிந்த பிறகு முழு நேர அரசியல்வாதியாக களம் காண போகும், விஜய்க்கு அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் என்ன என்ற திட்டமும் இருக்கிறதாம்.

Also Read: விஜய் கட்சி ஆரம்பித்ததால் இப்பவே நூல் விடும் நடிகை.. ஆசையை வெளிப்படையாக போட்டு உடைத்த ஹீரோயின்

சினிமாவில் இருந்து அரசியலுக்கு எத்தனையோ நடிகர்கள் வந்து போனாலும் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருப்பவர்கள் எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் தான். இவர்கள் இருவருமே செய்த அரசியலை தற்போது விஜய் தன்னுடைய தமிழகம் வெற்றி கழகம் மூலம் செய்ய இருக்கிறார். இதற்கான திட்டங்களை தான் தன்னுடைய நிர்வாகிகளுடன் அடிக்கடி கலந்து ஆலோசித்து வருகிறார்.

விஜய் எடுக்கப் போகும் முக்கிய முடிவுகள்

மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடைய நிறை குறைகளை கேட்டு அறிந்து, தன்னுடைய கட்சியின் கொள்கைகளை மக்கள் மனதில் பதிய வைக்க திட்டமிட்டு இருக்கிறார். தமிழ்நாடு முழுக்க நடை பயணமும் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. ரொம்பவும் பின் தங்கிய குக் கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களின் ஆசை என்ன தேவை என்ன என்பதை அறிந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.

பொதுவாக அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்களை பார்த்தாலே அவர்களிடம் எப்படி ஒதுங்கி போவது என யோசிப்பார்கள். ஆனால் விஜய் பத்திரிகையாளர்களிடம் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை கையாள இருக்கிறாரா. அதாவது வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் எந்த பத்திரிக்கையாளர்கள் நினைத்தாலும் விஜய் இடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. விஜய் தன்னுடைய அரசியல் பாதையில் வித்தியாசமான அணுகு முறையை கொண்டு வர முயற்சி செய்கிறார். இது அவருக்கு கை கொடுக்குறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: ரஜினியின் மாபெரும் ஹிட் படத்தில் வாய்ப்பு கேட்ட விஜய்.. உள்ளே புகுந்து பஞ்சாயத்து பண்ணிய கமல்

- Advertisement -spot_img

Trending News