செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சிங்கத்தை வேட்டையாடும் விஜய்.. லோகேஷ் வெளியிட்ட திரில்லிங் வீடியோ

மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ்- விஜய் கூட்டணியில் விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் லியோ. இந்த படத்தின் ப்ரோமோஷன் வீடியோ படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே ரிலீஸ் தேதியுடன் வெளியானது. எனவே வரும் ஆயுத பூஜை அன்று வெளியாகும் லியோ படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

சமீபத்தில் லியோ டீம் ‘The Crew Behind’ என்ற 7 நிமிட வீடியோவை வெளியிட்டு டிரெண்டாக்கினார்கள். இந்த வீடியோவில் தொழில் நுட்பக் கலைஞர்கள் காஷ்மீர் படப்பிடிப்பின் போது கொட்டுகிற பனிப்பொழிவில் -2 டிகிரி செல்சியஸில் எந்த அளவிற்கு உழைத்திருக்கிறார்கள் என்பதை காட்டும் விதமாகவே லோகேஷ் இந்த வீடியோவை வெளியிட்டார்.

Also Read: லியோவை பான் இந்தியா படமாக உருவாக்க மறுத்த விஜய்.. மெய்சிலிர்க்க வைத்த தளபதியின் பதில்

ஆனால் இந்த வீடியோவில் லியோ படத்தில் செம திரில்லர் காட்சி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் விதமான ஆதாரம் சிக்கி இருக்கிறது. அதாவது இதில் முக்கியமாக லோகேஷ் ஒரு இடத்தில் காட்டு விலங்குகளை மயக்க மருந்தை கொண்டு சுட்டு வீழ்த்தி மயக்கம் அடைய செய்யும் மருந்தை துப்பாக்கியில் லோட் செய்வது போல் காட்டப்பட்டிருக்கும்.

ஏற்கனவே லியோ படத்தில் சிங்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், காட்டின் ராஜாவான சிங்கத்தை லியோ படத்தில் பிரம்மாண்டமாக காட்டுவதற்கான கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் பல கோடி செலவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

Also Read: அனிருத்தை ரிஜெக்ட் செய்த ஏஜிஎஸ்.. தளபதி 68இல் யுவன் வர காரணம்

ஒருவேளை லியோ உடன் சிங்கம் படம் முழுக்க பயணிக்குமோ என யூகிக்கப்பட்டது. ஆனால் இப்போது லோகேஷ் வெளியிட்டு இருக்கும் வீடியோவை வைத்து பார்க்கும் போது லியோ தான் சிங்கத்தை வேட்டையாடுவது போல் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

மேலும் லியோ படத்தில் விஜய்யின் ஹேர் ஸ்டைல் சிங்கத்தின் பிடரி முடி போலவே வைத்திருக்கிறார். அதே போல சிங்கத்தின் குணாதிசயமும் பண்புகளும் லியோவிடம் இருக்கும் என்றும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த படத்தில் விஜய் தனக்கு நிகரான சிங்கத்தை தான் வேட்டையாடுவது போல கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

Also Read: விஜய் மகன் சஞ்சய் நடிக்க வேண்டும் என அடம்பிடிக்கும் 5 பிரபலங்கள்.. நிராகரித்த முக்கிய காரணம் இது தான்

Trending News