புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஒரே அடி தான் மிஸ் ஆகவே கூடாது.. தடைகளை உடைத்து பக்கா பிளான் போட்டு தயாராகும் விஜய்

Actor Vijay: விஜய் இப்போது அடுத்தடுத்த பிளான்களின் மூலம் அதிரடி காட்ட தயாராகி விட்டார். லோகேஷ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள லியோ அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே படம் பற்றிய பல சர்ச்சைகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இருந்தாலும் படத்தின் ரிலீஸ் அனைத்து பிரச்சனைக்கும் பதிலடி கொடுக்கும் என தயாரிப்பு தரப்பு காத்துக் கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் லியோ ட்ரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தையை வைத்து அரசியல் வட்டாரங்களிலும் ஒரு சலசலப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.

Also read: இந்த 13 இடங்களில் வெட்டி விட்ட சென்சார் போர்டு.. இதுவரை விஜய் படத்திற்கு நடக்காத கெட்டபெயர்

இதை வைத்து அவர் ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியாது என்ற விமர்சனங்களும் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதையெல்லாம் பார்த்து விஜய் பின்வாங்க மாட்டார் என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம். ஏனென்றால் அவர் தன்னுடைய பலம் என்ன என்று தெரிந்து கொண்டு தான் அரசியலில் குதிக்கவே முடிவெடுத்துள்ளாராம்.

அது மட்டுமல்லாமல் அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்ட முக்கிய புள்ளியின் அறிவுரையும் இவருக்கு கிடைத்திருக்கிறது. மேலும் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வரலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்தபோது என்னவெல்லாம் செய்தாரோ அதையெல்லாம் விஜய் இப்போது செய்ய தயாராகி விட்டாராம்.

Also read: என்னது அஜித், ஷாலினி விவாகரத்தா.? விஜய் போல அதிர்ச்சியை கிளப்பிய ட்வீட்

அதன் முதற்கட்டமாக கெஞ்சல், மிரட்டல், பேரம் பேசுவது போன்ற தடைகளை எல்லாம் தகர்க்க அவர் ரெடியாகவே இருக்கிறார். ஏனென்றால் அவருடைய டார்கெட்டே 2026 ஆம் ஆண்டு நடக்கப் போகும் தேர்தல் தான். அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் ஆதிக்கத்தை செலுத்தும் இரு பெரும் கட்சிகளுக்கு எண்டு கார்டு போடும் பிளானும் இருக்கிறதாம்.

அந்த வகையில் இளைய தலைமுறையிலிருந்து இவர் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். அதன்படி மாணவர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள், மருத்துவம் உள்ளிட்ட பல விஷயங்களிலும் அவருடைய மக்கள் இயக்கம் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் ஒரே அடிதான் மிஸ் ஆகக்கூடாது என்ற வெறியில் விஜய் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

Also read: தேடிவந்த ஸ்ரீதேவியை துரத்திவிட்ட உதயநிதி.. லியோவுக்கு போட்ட பெரிய கும்பிடு

Trending News