தமிழ் சினிமாவில் மரியாதைக்குரிய தயாரிப்பாளரான பிரபலம் ஒருவர் விஜய் படத்தில் செய்த தவறால் கிட்டத்தட்ட 90 லட்சம் இழந்து மூன்று வருடங்கள் தவித்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இன்று வசூல் சக்கரவர்த்தியாக இருந்தாலும் ஒரு காலத்தில் தொடர் தோல்வி படங்களை கொடுத்தவர் தான். போக்கிரி படத்திற்கு பிறகு துப்பாக்கி படம் வரை தொடர் தோல்விகள் தான்.
துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய்யின் மார்க்கெட்டே வேறு. தற்போது வசூல் சக்கரவர்த்தியாக உயர்ந்து நிற்கிறார். ஆனால் விஜய்யை வைத்து படம் தயாரிக்க ஆசைப்பட்டாராம் பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.
சில பல நண்பர்கள் விஜய்யை வைத்து படம் தயாரித்தால் பெரிய அளவில் வந்து விடுவீர்கள் என்று கூறியதால் விஜய்யை வைத்து படம் தயாரிக்க ஆசைப்பட்டு சிலரிடம் ஏமாந்து கிட்டத்தட்ட 90 லட்சம் வரை விட்டு விட்டாராம்.
அந்த 90 லட்சத்தை சம்பாதிக்க மூன்று வருடங்கள் ஆகி விட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதேபோல் கோலிவுட் வட்டாரங்களில் பிரபல நடிகர்களின் பட வாய்ப்பை வாங்கித் தருகிறேன் என நண்பர்களாக பழகி ஏமாற்றியவர்கள் பலர் உண்டு.
மாணிக்கம் நாராயணன் தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்துள்ளார். அதில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு, வடிவேல் நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன், பார்த்திபன் நடித்த வித்தகன் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.