செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கூடவே போய் பல்பை பீஸ்ஸாக்கிய ரஜினி.. ஆணியே புடுங்கல விஜய் போட்ட எண்டு கார்டு

Rajini- vijay : பொதுவாக சினிமா பிரபலங்கள் பலர் அரசியலில் வந்து சாதித்து காட்டி உள்ளனர். ஆனால் இப்போது உள்ள காலகட்டத்தில் அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் ஆதிக்கம் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. அதுவும் கேப்டன் விஜயகாந்த்க்கு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் ஆதரவு கொடுத்தனர்.

ஆனால் அவரால் கூட அரசியலில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியவில்லை. இதே போல் கமலும் இப்போது கட்சி தொடங்கிய நிலையில், ஒரு அரசியல் கட்சியின் கூட்டணி அவரது கட்சிக்கு தேவைப்படுகிறது. மேலும் ரஜினி அரசியலில் இறங்குகிறேன் என பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருந்தார்.

அதில் இருந்து பின்வாங்கிய நிலையில் பிஜேபியுடன் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார். இப்போது பிஜேபி உடனும் இணைய போவதில்லை என பல்பை பீஸ்ஸாக்கி விட்டார் ரஜினி. இந்நிலையும் தளபதி விஜய் அரசியலில் வருவதற்காக பல்வேறு முயற்சிகள் ஈடுபட்டு வந்தார்.

Also Read : ஆரம்பிக்கும் முன்பே அமுங்கி போன பதவி ஆசை.. அரசியலுக்கு முழுக்கு போடும் விஜய், காரணம் இதுதான்

முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்குவது, நூலகம் தொடங்குவது என பல விஷயங்களை செயல்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது அரசியலே வேண்டாம் என்று விஜய் முடிவுக்கு வந்துவிட்டாராம். ஏனென்றால் அரசியல் கட்சிகள் மிகவும் வலுவாக இருக்கிறது.

ஆகையால் இப்போது போட்டியிட்டால் வெற்றி எந்த அளவுக்கு நிச்சயம் என்பது சந்தேகம் தான். ஆகையால் அரசியலை சிறிது காலம் தள்ளி வைத்துவிட்டு தொடர்ந்து படங்களில் நடிக்கப் போகிறாராம். விஜய் அரசியலில் தொடங்குவதற்கு முன்பே எண்டு கார்டு போட்டு விட்டார்.

Also Read : விஜய் கட்சிக்கு இப்படி ஒரு பெயரா.? ஒரு ஓட்டு கூட தேறாது, எச்சரிக்கும் விசுவாசிகள்

Trending News