ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

எதா இருந்தாலும் பாத்துக்கலாம்.. TVK கொடியின் யானை சர்ச்சையில் விஜய்யின் முடிவு இதுதான்

Vijay: நேற்று சோசியல் மீடியா முழுவதுமே விஜய் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது. அவருடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதை ஏற்றி வைத்த தளபதி தொண்டர்கள் முன் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து கட்சி பாடலும் வெளியானது. ஆனால் கட்சி கொடி தான் இப்போது வரை ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இந்த கொடியின் நிறம் ஏற்கனவே ஸ்பெயின் நாட்டு கொடியில் இருக்கிறது. அதேபோல் யானை படமும் விளம்பர லோகோ போல் உள்ளது என கலாய்த்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமும் யானை தான். அதை எப்படி விஜய் தன் கட்சி கொடியில் பயன்படுத்தலாம். உடனடியாக யானை படத்தை நீக்க வேண்டும் என கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விஜய்க்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பு

அப்படி இல்லை என்றால் தேர்தல் ஆணையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்படும் எனவும் கூறியிருந்தனர். இதற்கு தமிழக வெற்றிக் கழகம் தற்போது பதிலடி கொடுக்க தயாராகி விட்டதாக தகவல் கசிந்துள்ளது.

அதாவது கொடியில் இடம்பெறும் வண்ணங்கள் படங்கள் உள்ளிட்ட விஷயங்களை தீர்மானிப்பதற்கு கட்சிக்கு முழு உரிமை இருக்கிறது. இது சம்பந்தமாக தேர்தல் ஆணையம் கேட்டால் பதில் அளிக்க தயார் என முடிவெடுத்துள்ளனர்.

கொடி அறிமுகப்படுத்தப்பட்டு சில மணி நேரங்களிலேயே இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. ஆனால் விஜய் அமைதியாக அனைத்தையும் கவனித்து வந்தார். தற்போது எல்லாத்துக்கும் தயார் என அவர் முடிவெடுத்துள்ளதாக வந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

யானை பட சச்சைக்கு பதிலடி கொடுத்த விஜய்

Trending News