திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்க்கு அக்கட தேசத்திலிருந்து வந்த கோரிக்கை.. ரஜினியை குறித்து, நஷ்ட ஈடு கேட்ட அவலம்

Actor Vijay: ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சிற்கு பிறகு பூதாகரமாக பார்க்கப்பட்ட சர்ச்சை தான் சூப்பர் ஸ்டார் பட்டம். அதைத்தொடர்ந்து ஜெயிலர் பட வெற்றியினை கொண்டாடி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். இந்நிலையில் அக்கட தேசத்திலிருந்து புது பிரச்சனையாய் விஜய்க்கு வந்த கோரிக்கை குறித்து இத்தொகுப்பில் காணலாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் விஜய். இப்படம் வெளிவரும் தேதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வேளையில் வாரிசு பட நஷ்டத்தை குறித்து அக்கட தேசத்திலிருந்து விஜய்க்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.

Also Read: வில்லன்களை வெறுக்கும் அளவிற்கு மோசமாக நடித்த 5 கதாபாத்திரங்கள்.. ரஜினிக்கு டஃப் கொடுத்த வர்மன்

தில்ராஜ் தயாரிப்பில் மேற்கொண்ட வாரிசு படம் தோல்வியை தழுவியது. மேலும் எதிர்பார்த்த வசூலையும் பெறவில்லை. அவ்வாறு இருக்க, இப்படம் கேரளா விநியோகஸ்தர்களால் வாங்கப்பட்டு பெரும் இழப்பை சந்தித்தனர். அவர்களில் ஒருவரான ராய், தில்ராஜிடமிருந்து இப்படத்தை வாங்க கமிஷன் தொகை ரூ 3.6 கோடி செலுத்தியதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு போடப்பட்ட தொகையை காட்டிலும், வாரிசு படம் மொத்தமாய் 6.83 கோடியை மட்டுமே வசூலித்தது. எதிர்பார்த்த வசூலும் குவியவில்லை. இந்நிலையில் நிலுவைத் தொகையான சுமார் ரூ 3.44 கோடியை கட்ட முடியாமல் திண்டாடி வருவதாகவும்.

Also Read: பையனை தூக்கி விட வெளியே வரும் விஜயகாந்த்.. தேர்தலுக்கான யுத்தியா என பரபரப்பு

இந்த பணத்தை திருப்பி கேட்டு பல மாதங்களாக அலைந்து பணம் கிடைக்காமல் வருத்தம் அடைந்து வருகிறேன். எனவே தாங்கள் இதில் தலையிட்டு தீர்வு காணுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் எனவும் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் தங்கள் குடும்பம் 3 தலைமுறையாக இந்த தியேட்டர் வியாபாரம் செய்து வருவதாகவும் இது போன்ற இழப்பை சந்தித்தது இல்லை எனவும் கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து தயாரிப்பாளர் தரப்பில் ஏழு மாதங்களாக பணத்தை திரும்பி பெற முயன்றேன்.

பலன் இல்லாததால் வேறு வழி தெரியாமல் நேரடியாகவே கடிதம் எழுதி விட்டேன். ஹீரோக்கள் சொன்னால் தயாரிப்பாளர்கள் கேட்பார்கள் அவர்களும் நஷ்டத்தில் இருந்தால் ஹீரோக்கள் வாங்கிய சம்பளத்தை கழித்துக் கொண்டுதான் பணத்தை திருப்பி தர வேண்டும். இதற்கு உதாரணமாக ரஜினிகாந்த தன் படமான பாபா, குசேலன், லிங்கா படத்திற்காக சம்பளத்திலிருந்து ஒரு தொகையை திருப்பி கொடுத்து நஷ்டத்தை ஈடுபட்டினார். ஆகையால் தயவு கூர்ந்து என் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு விஜய்க்கு நேரடியாக தெரிவித்துள்ளார் ராய்.

Also Read: வாரிசு நடிகருக்காக சத்யராஜ் இறங்கி செய்த காரியம்.. பல வருடத்திற்கு பின்பு சம்பவம் செய்ய போகும் அம்மாவாசை

Trending News