ஹாலிவுட் சினிமாவில் கூட 60 வயதுக்கு மேல் உள்ள இயக்குனர்கள் பலரும் இன்னமும் புதுப்புது கற்பனைத்திறன்களுடன் முன்னணி நடிகர்களை வைத்து படங்களை எடுத்து வருகின்றனர். ஆனால் இந்திய சினிமாவில் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ள இயக்குனர்களுடன் பணியாற்ற முன்னணி நடிகர்கள் விரும்புவதில்லை.
அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று தற்போது கோலிவுட்டில் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
திட்டமிட்டபடி மூன்று கட்ட படப்பிடிப்புகளை நடத்தி முடித்து விட்டனர். நான்காம் கட்டப்படப்பிடிப்புகளுக்காக படக்குழு விரைவில் டெல்லி செல்லவுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புகள் பாதிக்குமேல் முடிவடைந்த நிலையில் தற்போது விஜய்யின் அடுத்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதில் ஏற்கனவே பல இயக்குனர்கள் விஜய்யை சந்தித்து கதை சொல்லியுள்ளனர்.
அதில் ஒருவர்தான் பி வாசு. தமிழ் சினிமாவில் இவர் ஒருவர்தான் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இன்னும் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்சை வைத்து சந்திரமுகி 2 என்ற படத்தையும் இவர்தான் இயக்க உள்ளார்.
விஜய் சமீபகாலமாக இளம் இயக்குனர்களுடன் பணியாற்றுவதில் ஆர்வம் காட்டுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருந்தாலும் சன் பிக்சர்ஸ் உதவியுடன் விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளார் பி வாசு. ஆனால் அந்த கதையில் பெரிய அளவு இம்ப்ரஸ் ஆகாத விஜய் வேறு ஒரு கதை கொண்டு வாருங்கள் என சொல்லி டீசண்டாக அனுப்பி வைத்துவிட்டாராம்.