புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வெற்றி இயக்குனரை திருப்பி அனுப்பிய விஜய்.. இதெல்லாம் இப்ப வேணாம்

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப் படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். மிகப்பெரிய அளவில் ஆர்வத்தை தூண்டி இருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது.

அடுத்தடுத்து வெளியான போஸ்டர்கள் ரசிகர்களை கவர்ந்தாலும் சில கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவர் இயக்கும் படம் என்பதால் இந்த படம் ஆரம்பிப்பதற்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளிவந்த சிவகாசி, திருப்பாச்சி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு விஜய்க்காக புதிதாக ஒரு கதையை தயார் செய்து இருக்கிறார். அந்த கதையை அவர் விஜய்யிடம் கூறியிருக்கிறார் ஆனால் விஜய் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் அந்த கதையில் நடிக்க மறுத்திருக்கிறார்.

மேலும் ரசிகர்கள் இப்போது ஆக்ஷன் திரைப்படங்களை விரும்புவது கிடையாது என்றும், சில நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற கதையில் நடிக்கலாம் என்றும் கூறி இயக்குனரை விஜய் திருப்பி அனுப்பியிருக்கிறார். இருப்பினும் பேரரசு விஜய்க்காக ஒரு சூப்பரான கதையை தயார் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

அந்த கதையை எப்படியாவது அவரிடம் கூறி சம்மதம் வாங்கி விட வேண்டும் என்று அவர் உறுதியாக இருக்கிறார். ஆக்ஷன் கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கியவர் பேரரசு. ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் வேறு மாதிரி ட்ரெண்ட் இருக்கிறது. அந்த வகையில் இவருடைய கதையை தேர்ந்தெடுப்பது சந்தேகம்தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Trending News