தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தியேட்டர் காரர்களின் வாழ்வுரிமையை காப்பாற்றுவதற்காக மிகப்பெரிய ரிஸ்க் ஒன்றை தன்னுடைய சினிமா கேரியரில் எடுத்துள்ளார். அதுதான் மாஸ்டர் ரிலீஸ்.
எப்போதுமே விஜய் படங்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். ஆனால் தற்போதைய நிலவரப்படி விஜய்யின் படங்கள் வியாபாரம் செய்யும் வெளிநாடுகளில் தியேட்டர்கள் பல இடங்களில் திறக்கப்படாத சூழ்நிலை.
அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் முதலில் 100% அனுமதி கொடுத்து விட்டு பின்னர் 50 சதவீதமாக அரசு மாற்றி விட்டது. மேலும் கேரளா மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய பகுதிகளில் விஜய்யின் சுமாரான படங்களில் மிகப்பெரிய வசூலை வாரிக் குவிக்கும்.
ஆனால் மாஸ்டர் என்று மிகப்பெரிய படத்திற்கு அங்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 50% பார்வையாளர்களும் ஸ்ரீலங்காவில் 25 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் மாஸ்டர் படத்தின் வியாபாரம் பாதிக்கு பாதியாக குறைந்து விட்டதாம்.
இதனால் தயாரிப்பாளர் தரப்பு மிகவும் அப்செட்டாக இருந்ததை கவனித்த தளபதி விஜய் தானாக முன்வந்து தன்னுடைய சம்பளத்தில் 25 முதல் 30% திருப்பி கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளாராம். தற்போதைக்கு திரைத்துறை மீண்டு வரவேண்டும் என்பதே விஜய்யின் குறிக்கோள் எனவும் கூறுகின்றனர்.
இவ்வளவு பெரிய ரிஸ்க் எந்த நடிகரும் எடுக்க மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் விஜய்யை பொருத்தவரை நாம் இந்த ரிஸ்க்கை எடுக்கவில்லை என்றால் தமிழ் சினிமாவே தடுமாறி விடும் என்பதை உணர்ந்து தைரியமாக சம்பளத்தை விட்டுக் கொடுத்து பெரிய நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளருக்கு தெம்பு கொடுத்துள்ளாராம்.