Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி மற்றும் விஜய் பிரிந்து இருப்பதற்கு தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் நவீன் இருக்கிறார். அந்த வகையில் விஜய் மனதில் முழுக்க முழுக்க காவிரி தான் இருக்கிறார். காவிரிக்கும் விஜய் தான் ரொம்ப பிடித்திருக்கிறது என்பதை புரிந்து கொண்ட நவீன் தன்னால் முடிந்த உதவியை செய்து இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
அதனால் விஜய்யை பார்த்து பேசினால் சரியாக இருக்கும் என்று விஜய்யின் ஆபீஸ்க்கு நவீன் போகிறார். ஆனால் அங்கே நவீனை பார்த்ததும் விஜய் நக்கல் அடித்து இதற்கெல்லாம் காரணம் நீ தான். இதற்கு தானே ஆசைப்பட்டாய் என்று நவீன் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ளாமல் விஜய் வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்து விட்டார். இருந்தாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நவீன் தன்மீது தவறு இருக்கிறது என்பதால் கொஞ்சம் பொறுமையாகவே போகிறார்.
பிறகு உங்களையும் காவிரியும் சேர்த்து வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. காவிரியின் அம்மாவிடம் நான் பேசுகிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டதும் விஜய், நீ என்ன எங்களை சேர்த்து வைக்க போகிறாய், எனக்கு என்ன பண்ணனும் காவிரியை எப்படி திரும்ப கூட்டிட்டு வர வேண்டும் என்று எனக்கு தெரியும். சும்மா இந்த மாதிரி என்கிட்ட வந்து சீன் கிரியேட் பண்ணாத என்னுடைய பிரச்சினை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று நவீனை நோகடித்து பேசி விடுகிறார்.
இதனால் கடுப்பான நவீன், இனியும் உன்னிடம் பேசினால் சரியாக இருக்காது என்று கிளம்ப தயாராகி விட்டார். அப்படி போகும் பொழுது உனக்கு உண்மையிலேயே காவிரியுடன் சேர வேண்டும் என்று நினைப்பு இருந்தால் வெண்ணிலாவுக்கு செய்ய வேண்டிய விஷயங்களை செய்து வீட்டை விட்டு அனுப்பி காவிரிக்காக வந்து சாரதா அம்மாவிடம் பேசு என்று சொல்கிறார்.
ஆனாலும் இதையும் காது கொடுத்து கேட்காத விஜய் எனக்கு என்ன பண்ணனும் தெரியும். நீ உன் வேலையை பாரு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். இதனை தொடர்ந்து காவிரி, விஜயை மறக்க முடியாமல் பீல் பண்ணி அப்பாவை நினைத்து சொல்லுகிறார். பிறகு மறுநாள் காலையில் எதுவும் நடக்காத படி பழைய மாதிரி அனைவரிடமும் சிரித்து பேசி வேலைக்கு போக தயாராகி விட்டார்.
காவிரியின் நடவடிக்கைகளை பார்த்த சாரதாவும் காவிரிக்கு எது சந்தோஷமோ அதை செய்யட்டும் என்று சம்மதம் கொடுத்து விடுகிறார். அந்த வகையில் காவிரி வேலை தேடி விஜயின் நண்பர் ஆபீசுக்கு வருகிறார். உடனே அவர் விஜய்க்கு போன் பண்ணி தகவலை கொடுக்கிறார். பிறகு விஜய், காவிரியை நேரடியாக சந்தித்து பேசி உன்னுடைய வீக்னஸ் பாயிண்டும் பிளஸ் பாயிண்ட் நான் தான்.
உன்னை என் மனதில் இங்கு வைத்திருக்கிறேன் யாருக்காகவும் உன்னை விட்டுக் கொடுக்க முடியாது என்று அவருடைய காதலை புரிய வைக்க முயற்சி எடுக்கிறார். ஆனால் காவேரி விஜய்யின் காதலை புரிந்து கொண்டாலும் என்னுடைய அம்மா தான் எனக்கு முக்கியம். மறுபடியும் அவர்களை என்னால் கஷ்டப்படுத்த முடியாது ஒழுங்கு மரியாதையா என்னை தொந்தரவு பண்ணாம விலகி விடுங்கள் என்று விஜய் இடம் கடுமையான வார்த்தைகளால் பேசி விடுகிறார்.