திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

யாரும் வாங்கல, தியேட்டரிலும் மதிக்கல முடங்கி கிடந்த விஜய் சேதுபதியின் 5 படங்கள்.. ரூட்டை மாத்திய மக்கள் செல்வன்

Vijay Sethupathi: பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழிக்கு சரியான ஆள் யார் என்றால் விஜய் சேதுபதி தான். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக கிடைக்கும் சின்ன சின்ன கேரக்டர்களை ஒத்துக் கொண்டு நடித்து வந்த இவர், தன்னுடைய கடின உழைப்பின் மூலம் பெரிய ஹீரோ ஆனார். இருந்தாலும் இப்போது இவருக்கு போராத காலமா என்ன என்று தெரியவில்லை, இவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் எதுவுமே மக்களிடம் எடுபடவில்லை. வியாபாரமே ஆகாமல், தியேட்டரிலும் ரசிகர்கள் மதிக்காத விஜய் சேதுபதியின் 5 படங்களை பற்றி பார்க்கலாம்.

வன்மம்: விஜய் சேதுபதி இப்படி ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்று பல பேருக்கு தெரியாது. நடிகர் கிருஷ்ணாவுடன் இவர் இணைந்து நடித்த படம் தான் வன்மம். இந்த படம் கடந்த 2014 ஆம் ஆண்டு தியேட்டரில் ரிலீஸ் ஆனது. வந்து தடம் தெரியாமல் மொத்தமாய் மண்ணை கவ்வி விட்டது.

Also Read:ஜவான் வெற்றியால் தமிழுக்கு முழுக்கு போடும் அட்லீ.. காப்பினாலும் நரசுஸ் காப்பிதான் வேணுமாம்

ரெக்க: விஜய் சேதுபதி, லட்சுமிமேனன் நடிப்பில் உருவான படம் தான் ரெக்க. படத்தின் பாடல்கள் ரசிகர்களின் மனதில் நின்ற அளவுக்கு, இந்த படத்தின் கதை நிற்கவில்லை. கமர்சியலாக ஹிட் கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்த விஜய் சேதுபதிக்கு, இந்த படம் ஒரு பெரிய அடியாகவே அமைந்துவிட்டது.

ஜூங்கா : ஜூங்கா படம் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ஒரு பக்கம் விஜய் சேதுபதி, மறுபக்கம் சாயிஷா, மடோனா என இரண்டு அழகிய ஹீரோயின்கள் இருந்தும் இந்த படம் ரசிகர்களிடம் எடுபடாமல் போய்விட்டது.

புறம்போக்கு என்கிற பொதுவுடமை: விஜய் சேதுபதியுடன் ஆர்யா, ஷியாம், கார்த்திகா நாயர் இணைந்து நடித்த படம் தான் புறம்போக்கு என்கிற பொதுவுடமை. முதலில் புறம்போக்கு என டைட்டில் இடப்பட்டு பின்னர் புறம்போக்கு என்னும் பொதுவுடமை என மாற்றப்பட்டது. இந்த படம் தூக்கு தண்டனைக்கு எதிராக களத்தில் இறங்கிய படம். இருந்தாலும் படு தோல்வி அடைந்தது.

Also Read:அட்லீ – எங்கள பார்த்தா மெண்டல் மாதிரி இருக்கா.? பிசிரு தட்டாமல் 5 படங்களில் இருந்து காப்பியடித்த புகைப்பட ஆதாரம்

சிந்துபாத்: விஜய் சேதுபதி மற்றும் அஞ்சலியின் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரிலீசான படம் தான் சிந்துபாத். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனும் நடித்திருந்தார். காதல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இருந்தாலும் இந்த படம் தோல்வி அடைந்தது.

இப்படி நடித்த படங்கள் எல்லாம் மொத்தமாய் சொதப்பிக்கொள்ள, ரசிகர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதே சரியாக புரிந்து கொண்ட விஜய் சேதுபதி, நடித்தால் ஹீரோ தான் என இருக்காமல் வில்லனாக கலக்கி வருகிறார்.

Also Read:மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய ஷாருக்கான்.. ரெட் ஜெயண்டால் அட்லீ கூட்டணிக்கு விழப் போகும் மரண அடி

Trending News