எல்லாப் புகழும் மகாராஜாவுக்கே.. பல கோடிகளுக்கு வியாபாரமான VJS 54, விஜய் சேதுபதி இப்போ ஹாப்பி அண்ணாச்சி

maharaja-movie
maharaja-movie

Vijay Sethupathi: விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த மகாராஜா அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு முன்பு அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் சரியாக போகவில்லை.

ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து இப்படம் பெரும் வசூலை வாரி குவித்தது. அதை அடுத்து இப்போது விஜய் சேதுபதி கைவசம் மூன்று படங்கள் இருக்கிறது.

அதில் பாண்டிராஜ் உடன் அவர் இணையும் 54வது படத்தில் நித்யா மேனன் ஹீரோயின் ஆக நடிக்கிறார். எதார்த்தமான குடும்ப கதையாக இப்படம் உருவாகி இருக்கிறது.

விஜய் சேதுபதி இப்போ ஹாப்பி அண்ணாச்சி

இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்திற்கு ஆகாச வீரன் என்ற பெயரை இயக்குனர் யோசித்து வைத்துள்ளாராம். ஏனென்றால் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திர பெயர் வீரா.

அதனால் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. மேலும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் 22 கோடிகள் கொடுத்து வாங்கி இருக்கிறது.

இது பெரும் சாதனை தான். ஏனென்றால் மகாராஜா 17 கோடிகளுக்கு தான் வியாபாரமானது. இதனால் படத்தை தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ் பயங்கர குஷியில் இருக்கிறார்களாம்.

அதுமட்டுமின்றி படத்தை மே அல்லது ஜூன் மாதம் வெளியிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. நிச்சயம் இதில் விஜய் சேதுபதி நித்யா மேனன் கெமிஸ்ட்ரி வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement Amazon Prime Banner