ஹீரோவாக மட்டுமல்லாமல் வயதான கேரக்டர், கெஸ்ட் ரோல், திருநங்கை, வில்லன் என பல பரிணாமங்களில் தனது நடிப்பை வெளிக் காட்டிக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் பிரபலமான நடிகராக கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்.
இது மட்டுமின்றி சினிமா தயாரிப்பு, டப்பிங் பேசுவது, பின்னணி பாடுவது என பல வேலைகளை செய்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ரிலீசான மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மெரி கிறிஸ்துமஸ், 19 (1)(எ), விடுதலை, காந்தி டாக்ஸ், மும்பைகரர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவர் கதாநாயகனாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகுவதைவிட வில்லனாக நடிப்பதற்குதான் படங்கள் வரிசை கட்டி நிற்கிறதாம். சுந்தரபாண்டியன், விக்ரம் வேதா போன்ற படங்களில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடந்த பவானி கேரக்டர்தான் அவருக்கு மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது.
அதைத் தொடர்ந்து கமலஹாசனின் விக்ரம் படத்தில் வயதான வில்லன் ரோலில் விஜய் சேதுபதி மாஸ் காட்டினார். அதன்பிறகு பல மொழிகளிலும் வில்லன்களுக்கு ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஆக விஜய் சேதுபதியைதான் தேடிவருகின்றனர்.
தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2, ஹிந்தியில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான், தமிழில் ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது என்றாலே பல கோடிகளில் டீல் பேசி வருகிறார். சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றில் வில்லனாக நடிக்க அவரிடம் அணுகி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் ஹீரோ பாலகிருஷ்ணா நீங்கள் வில்லனாக நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். ஐயையோ வில்லன் கதாபாத்திரம் வேண்டவே வேண்டாம் என்று அவர்களை அலைகழிக்க விட்டிருக்கிறார் மனிதன். இப்படி நெருக்கடியை ஏற்படுத்தி 25 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார். பார்த்து சார் ஏற்கனவே தயாரிப்பாளர்கள் வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. சொல்லாம கொள்ளாம திருப்பிவிட போறாங்க!