திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதற்கு முன்னர் என்னென்ன படங்களில் நடித்துள்ளார் தெரியுமா? ஓரமா இருந்த ஆளு!

விஜய குருநாத சேதுபதி காளிமுத்து என்ற பெயரை விஜய் சேதுபதி என சுருக்கமாக வைத்துக்கொண்டு தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ராஜ்ஜியம் படைத்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் என்பது தான் நமக்குத் தெரியும்.

ஆனால் அதற்கு முன்னதாக விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கை எப்படிப்பட்டது என்றால் துணை நடிகராக கிட்டத்தட்ட ஆறு படங்களில் நடித்துள்ளார். ராஜபாளையத்தில் பிறந்த விஜய் சேதுபதி சென்னைக்கு வந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஒரு சேல்ஸ்மேனாக, fast food கடையில் கணக்காளராக, பூத் ஆபரேட்டராக வேலை பார்த்துள்ளார். பின்பு கூத்துப்பட்டறையில் அக்கவுண்டன்டாக வேலை பார்த்த விஜய் சேதுபதிக்கு நடிப்பின் மீது உள்ள மோகத்தினால் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.

அப்படி நடித்து வெளிவந்த படங்களின் வரிசைகளை தற்போது பார்க்கலாம், கார்த்திக் நடிப்பில் வெளிவந்த நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, புதுப்பேட்டை போன்றவை இதில் முக்கியமான படங்களாக பார்க்கப்படுகிறது.

vijay-sethupathi-cinemapettai
vijay-sethupathi-cinemapettai

அதற்குப் பின்னர் தான் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஒரு ஹீரோவாக அறிமுகமாகி தற்போது வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார் விஜய் சேதுபதி.

vijay-sethupathi-cinemapettai-2
vijay-sethupathi-cinemapettai-2

தற்போது வரை விஜய் சேதுபதி 15 விருதுகள் பெற்றுள்ளார். அதில் முக்கியமான படங்கள் என்று பார்த்தால் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூதுகவ்வும், தர்மதுரை, விக்ரம்வேதா, சூப்பர் டீலக்ஸ், 96 ஆகிய படங்கள்.

- Advertisement -spot_img

Trending News