ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சஞ்சய் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க காரணம்.. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

Vijay Sethupathi – Sanjay : விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தார். மேலும் சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சத்தமே இல்லாமல் போடப்பட்டிருந்தது. இதில் விஜய்யே கலந்து கொள்ளாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இவரின் முதல் படத்தில் யார் ஹீரோவாக நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

இந்நிலையில் கவின், அதர்வா மற்றும் ஹரிஷ் கல்யாண் போன்ற நடிகர்களை வைத்து இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்பிறகு கவின் தான் நடிக்கப் போகிறார் என்று ஒரு பேச்சு போய்க் கொண்டிருந்த நிலையில் இப்போது விஜய் சேதுபதி சஞ்சய் படத்தில் கமிட்டாகி இருக்கிறாராம்.

அவர் ஹீரோவாக நடிக்கிறாரா இல்லை சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா என்பது பின்பு தான் தெரியவரும். மேலும் விஜய் சேதுபதி சஞ்சய் படத்தில் நடிக்க ஒரு காரணம் இருக்கிறதாம். அதாவது விஜய்யின் வாரிசு முதல் முறையாக வெள்ளித்திரையில் படம் இயக்குகிறார். அவருக்கு உதவினால் விஜய் தனக்கு உதவுவார் என்ற பேராசை தான்.

Also Read : விஜய்யை மிஞ்ச ரஜினி நடிக்கப் போகும் 5 பிரம்மாண்ட இயக்குனர்கள்.. பட்ஜெட் 1500 கோடி, அப்படின்னா வசூல்?

விஜய் சேதுபதியின் மகன் விடுதலை படத்திலேயே சில காட்சிகளில் நடித்திருந்தார். இப்போது ஹீரோவாக நடிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாராம். ஆகையால் அந்தப் படத்தில் விஜய்யை நடிக்க கூப்பிட்டால் கண்டிப்பாக உதவி செய்வார் என்ற யோசனை தான் விஜய் சேதுபதி இப்போது சஞ்சய் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது.

ஆனால் மற்றொருபுறம் விஜய்யை சினிமாவில் தூக்கி விட்டதே விஜயகாந்த் தான். ஆனால் அவரையே விஜய் இப்போது கண்டுகொள்ளவில்லை என்று பலரும் சாடி வருகிறார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் விஜய் சேதுபதியின் மகனுக்கு தளபதி உதவுவாரா என்பது சந்தேகம் தான்.

Also Read : சைலன்டாக பட பூஜையை போட்ட தளபதியின் வாரிசு.. விஜய் கலந்து கொள்ளாததன் காரணம்

Trending News