புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்த நடிகை.. அதுவும் ஹிந்தியில்.

ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த பிரபல நடிகை ராசி கண்ணா
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய, இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் நயன்தாரா மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார், சுந்தர்.சியின் அரண்மனை, கார்த்தியின் சர்தார் போன்ற பல புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் ராசி கண்ணா நடித்துள்ள நிலையில், மீண்டும் விஜய் சேதுபதியுடன் நடிக்கவுள்ளதாக இவர் தெரிவித்துள்ளார்.

raashi khanna
raashi khanna

இது குறித்து பேசிய ராசி கண்ணா, “எனக்குப் பிடித்த நடிகர் மற்றும் மனிதருடன் மூன்றாவது முறையாக நடிக்கிறேன். இந்த முறை ஹிந்தியில். ஹிந்தி சினிமாவிற்கு வரும் விஜய் சேதுபதியை நான் வரவேற்கிறேன்” என புகழ்ந்து கூறியுள்ளார்.

சமந்தா நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்கும் புதிய ஹிந்தி வெப் சீரிஸில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதில் ராசிகண்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் மூலம் இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணைகிறார்கள்.

இத்தொடரில் இவர்கள் மட்டுமல்லாமல் உடன் ஹிந்தி நடிகர் ஷாகித் கபூர் உட்பட பலர் நடிக்கின்றனர். இத்தொடரின் படப்பிடிப்பில் தற்போது விஜய் சேதுபதி கலந்துகொண்டிருக்கிறார்.

Trending News