தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாய் வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஊரடங்கு காலத்திலும் சளிக்காமல் தனது வேலைகளை சரியாக செய்து வருகிறார் சேதுபதி.
ஒரு நடிகராக ஒரு பாடகராக ஒரு தயாரிப்பாளராக ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டாக தனது சரியான மூவ்மெண்ட்களை கலையுலகில் காட்டி தன்னை லைம்லைட்டிலேயே தக்க வைக்கிறார் விஜய் சேதுபதி.
தன் படங்களின் தனித்துவங்களை எடுத்து மாற்று மொழிகளிலும் வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறார் மக்கள் செல்வன்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அடுத்தடுத்து படங்களை ஒப்புக்கொள்கிறீர்களே நீங்கள் தவறவிட்ட படம் ஏதும் உண்டா என்றதற்கு அது அதிகம் என்றும் பல படங்களுக்காக சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதற்காகவும் கொடுத்த நாட்களை மீண்டும் பெற முடியாத சூழ்நிலைகளாலும் அப்படியான நிலைக்கு தள்ளப்பட்டேன் என்றும் கூறினார்.
அதற்காக வருந்தியதுண்டா என்ற கேள்விக்கு இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்திற்கு என்னை கேட்டார்கள் அப்போது ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றும் அதற்காக கொஞ்சம் வருந்தியதாகவும் கூறினார். ஆனாலும் ஹரிஷ் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டியிருந்தார் என்றும் கூறினார்.
மேலும் கைதி படத்திற்கும் தனக்கு முதல் வாய்ப்பு வந்தது. அதையும் சில சூழல்களால் மறுக்கவே லோகேஷ் கனகராஜ் கார்த்தியிடம் சென்றார் என்றும் அந்த படத்திற்காக நான் வருந்தவில்லை என்றும் கார்த்திக்கு சரியான கதையாக பொறுந்திய கைதி என்னை விட நல்ல மாஸ் ஓப்பனிங் தந்தது என்றும் கூறினார்.
அதிவிரைவில் அடுத்தடுத்த படங்களுக்கான அப்டேட்டுகள் வரும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறி நன்றி சொல்லி விடை பெற்றோம்.