புதன்கிழமை, நவம்பர் 20, 2024

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் பாரதிராஜா.. அதுவும் இந்த நடிகருடன் கூட்டணி

கடந்த 20 ஆண்டுகளாக இயக்குனர் சிகரம் பாரதிராஜா இயக்க துடிக்கும் படமே குற்றப் பரம்பரை. கதாசிரியர் ரத்தினக்குமார் எழுதிய குற்றப்பரம்பரை கதையில், சிவாஜி கணேசன், விஜய்காந்த் மற்றும் சரத்குமார் ஆகியவர்களை வைத்து உருவாக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் யாருமே நடிக்க முன்வராததால் தானே நடிக்க முடிவு செய்தார். ஆனால், வேறு சில காரணங்களால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை.

இதற்கிடையில் இயக்குனர் பாலாவும் அதே கதையை கையில் எடுத்தார். இதனால் பாலாவுக்கும், பாரதிராஜாவுக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டது. பின்னர் பாலா இக்கதையை கைவிட்டார். இந்நிலையில் இப்போது இயக்குனர் பாரதிராஜா மீண்டும் குற்றப்பரம்பரை கதையை தூசி தட்டியுள்ளார். மேலும், விஜய் சேதுபதியை கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் மோஸ்ட் பாப்புலர் ஆக்டராக வலம் வருகிறார். இவர் இல்லாத புதிய படங்களே இல்லை என்றுதான் கூறவேண்டும். அந்தளவிற்கு கைவசம் படங்களை வைத்துள்ளார். கிட்டத்தட்ட 25 படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ள விஜய்சேதுபதி கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார். தற்போது கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு பிஸியாக இருக்கும் ஒரே நடிகரும் இவர்தான்.

vijay-sethupathi-cinemapettai
vijay-sethupathi-cinemapettai

குற்றப்பரம்பரையில் விஜய் சேதுபதி நடித்தால் நன்றாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News