புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விஜய் சேதுபதிக்கு வந்த அடுத்த சோதனை.. புதுசு புதுசா பிரச்சனையை கிளப்புறாங்க!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி எந்த பாரபட்சமும் இன்றி தன்னை தேடி வரும் படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமான சமயத்தில், நாம் தமிழர் உள்பட பல கட்சிகளின் எதிர்ப்பால், விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து விலகியதும், விஜய் சேதுபதி இல்லையென்றால் அப்படமே வேண்டாம் என முரளிதரன் அப்படத்தை கைவிட்டதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில், தி பேமிலி மேன் படத்தை இயக்கியவர்களின் புதிய வெப் தொடரில் நடிக்க உள்ள விஜய் சேதுபதியை, நாம் தமிழர் கட்சி பிரமுகர் இடும்பாவனம் கார்த்திக் கண்டித்துள்ளார்.

vijay sethupathi
vijay sethupathi

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “தி பேமிலி மேன் 2 தொடர் மூலம் புலிகளை கொச்சைப்படுத்தி, உலகெங்கும் வாழும் தமிழர்களை காயப்படுத்திய அயோக்கியர்களோடு கொஞ்சிக்குலவ எப்படி முடிகிறது? வெட்கமின்றி மக்கள் செல்வன் என சுய தம்பட்டம் அடிக்க எப்படி முடிகிறது? கொஞ்சமேனும் நன்றியோடு இருங்க விஜய் சேதுபதி” என கூறியுள்ளார்.

முன்னதாக முரளிதரன் வாழ்கை வரலாறு விஜய்சேதுபதி நடிக்க இருந்த சமயத்தில் நாம் தமிழர் கட்சியினர் விஜய்சேதுபதியை தேச துரோகி என கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். தற்போது மீண்டும் அவர் வெப் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்து வருவதால், விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Trending News