திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

விஜய் சேதுபதியுடன் ஒரே ஒரு படம்தான்.. 17வயது நடிகைக்கு கூரையை பிச்சிகிட்டு கொட்டும் பட வாய்ப்புகள்

விஜய் சேதுபதியின் படம் ஒன்றில் நடித்துள்ளார் இளம் நடிகைக்கு தற்போது தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளில் இருந்தும் படவாய்ப்புகள் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டிக் கொண்டிருக்கும் செய்திதான் கோலிவுட் வட்டாரத்தில் அதிரடி பேச்சாக உள்ளது.

சமீபகாலமாக விஜய் சேதுபதி ஹீரோவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். மேலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்களை விட குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களுக்கு சம்பளம் அதிகமாக கிடைக்கிறதாம்.

இதனால் தற்போது இந்திய அளவில் மாஸ் காட்டி வருகிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் தெலுங்கில் விஜய் சேதுபதி கொடூர வில்லனாக நடித்த உப்பண்ணா என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தில் இளம் நடிகைக்கு அப்பா வேடத்தில் மிரட்டி இருந்தார். மேலும் இந்த படம் மூன்று நாட்களில் 50 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

uppana-krithi-shetty
uppana-krithi-shetty

இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் தான் 17 வயதான கிருத்தி செட்டி. பள்ளிப்பருவம் ஆக இருந்தாலும் பார்ப்பதற்கு பப்பாளி பழம் போல இருக்கும் இந்த நடிகைக்கு தான் தற்போது தெலுங்கு சினிமாவில் செம்ம மவுசு.

இதனால் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அந்த இளம் நடிகையை நடிக்க வைக்க முன்னணி நடிகர்கள் முதல் இரண்டாம் கட்ட நடிகர்கள் வரை அனைவரும் போட்டி போட்டு கொள்கிறார்களாம்.

Advertisement Amazon Prime Banner

Trending News