திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பைசனுடன் விஜய்சேதுபதி கூட்டணி.. வேற வெவல்தான் ப்ரோ, அதிரும் கோலிவுட்

விஜய் சேதுபதி வருடம் தவறாமல் ஹிட்டு படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அந்த வகையில், விஜயுடன் அவர் நடித்த மாஸ்டர் படம் சூப்பர் ஹிட். அடுத்து, 2022 ஆம் ஆண்டு கமலுடன் அவர் இணைந்து நடித்த விக்ரம் இண்டஸ்ட்ரி ஹிட்.

இதையடுத்து, கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் அவர் நடித்த பாலிவுட் படமான ஜவான் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி 12 ஆம் தேதி விஜய் சேதுபதி – கத்ரினா கைஃப் இணைந்து நடித்த மெரி கிறிஸ்துமஸ் படம் வெளியாகி இதுவும் ஹிட்டு.

எனவே தமிழ், தெலுக்கு, இந்தி என பல மொழிகளிலும் மாஸ் காட்டி வரும் விஜய் சேதுபதி நிதிலன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்த மகாராஜா படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டு. எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது.

இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்த நிலையில், சீனாவில் 700 திரையரங்குகளில் மஹாராஜா படம் ரிலீஸாகவுள்ளது. அங்கு ரூ.500 கோடிக்கு மேல் வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாரி செல்வாஜ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

இப்படி தொடர்ந்து ஹிட் கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்து வரும் விஜய்சேதுபதி, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். எனவே அவர் அடுத்த படத்தில் யாருடன் கூட்டணி என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் கர்ணன், மாமன்னன், வாழை என தொடர்ந்து ஹிட் கொடுத்து முன்னனி இயக்குனராக வலம் வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் அடுத்தாண்டுதொடக்கத்தில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த புதிய படம் எப்போது ஆரம்பம்?

தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வரும் நிலையில், அடுத்து, கார்த்தி நடிப்பில் ஒரு படம் இயக்கவுள்ளார். எனவே இவ்விரு படங்களையும் முடித்த பின் விஜய்சேதுபதியை வைத்து புதிய படம் இயக்கப்போகிறார் எனவும், இது அரசியல் படமாக இருக்கலாம் என சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Trending News