செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய் சேதுபதியுடன் இணையும் கௌதம் மேனன்.. இந்த படமாவது முடிச்சு வெளி வருமா.?

பொதுவாகவே தமிழ் ரசிகர்களுக்கு கௌதம் மேனன் இயக்கிய படங்களை பார்ப்பதற்கு அப்படி ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அந்த அளவிற்கு தான் இவரது படங்கள் இருக்கும். இவர் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கக் கூடியவர். இவர் இயக்கிய படங்களில் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.

ஆனால் இவர் தற்பொழுது படம் எடுப்பதை குறைத்துக் கொண்டு நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் இயக்குனராக இருக்கும் போது கிடைத்த பணத்தைவிட இதில் நிறைய பணம் பார்த்து வருகிறார். அதனால் படங்களில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் வெப் சீரியஸ் மூலமும் நடித்துள்ளார். இதனால் இவருடைய பாதை சற்று மாறிக்கொண்டே வருகிறது என்று சொல்லலாம்.

Also read: தற்கொலைக்கு முயன்ற தயாரிப்பாளர்.. மிகப் பெரிய ரிஸ்க் எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்த கௌதம் மேனன்

ஏற்கனவே இவர் இயக்கி வெளிவந்து சுமாராக ஓடிய வெந்து தணிந்த காடு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார். இதே மாதிரி இவர் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் நான்கு வருடத்திற்கு மேல் கிடப்பில் கிடைக்கிறது. அந்த படத்தை இன்னும் வெளியிடாமல் இருக்கிறார்.

ஆனால் தற்பொழுது அதை எல்லாத்தையும் மறந்து விட்டு திடீரென புதிதாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார். ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு நடிகராக நடிக்கும் படங்கள் சமீபத்தில் அந்த அளவிற்கு ஓடவில்லை என்றே சொல்லலாம். ஆனால் இப்பொழுது இவர்கள் இருவரும் சேர்ந்த கூட்டணியில் படம் எப்படி அமையப்போகுது என்று தெரியவில்லை.

Also read: அதல பாதாளத்தில் தொங்கும் விஜய் சேதுபதி.. பத்து நாளில் இத்தனை படம் பிளாப்பா.?

இதற்கு இடையில் இந்த படத்தில் ஒரு முக்கியமான இடத்தில் அபிஷேக் பச்சன் நடிக்க இருக்கிறாராம். தற்போது இவருடைய நிலைமை பார்த்தா ஒரு பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது. அதாவது போன இடம் எல்லாம் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைக்கிற மாதிரி தான் வைத்து வருகிறார்.

அதாவது இவருடைய இயக்குனர் என்ற பாணியில் அழகான திரைப்படங்கள் மூலம் காதல் மற்றும் ரொமாண்டிக் கொண்டு வந்தவர். அப்படியே இயக்குனராகவே இருந்திருந்தால் கூட ஒரு வெற்றி இயக்குனர்களில் முன்னணியாக இருந்திருப்பார். ஆனால் இடையில் நடிப்பதற்கு ஆசைப்பட்டு படத்தை இயக்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போய்விட்டார். ஆனால் அதை எல்லாம் சரி செய்யும் விதமாக இந்த படத்தையாவது சீக்கிரமாக முடித்து வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: சண்டைக் காட்சிகளில் அசத்தும் குட்டி விஜய் சேதுபதி..

Trending News