விஜய் மற்றும் விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவில் எட்டாத உயரத்தில் இருக்கின்றனர். தமிழையும் தாண்டி ஹிந்தி வரை சென்று தட்டி தூக்குகிறார் விஜய் சேதுபதி. இவர்கள் இருவரும் சேர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த படம் மாஸ்டர். இந்த படம் இருவருக்கும் ஒரு டீசன்ட் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
இந்த படத்தில் விஜய் சேதுபதியின் சின்ன வயசு கதாபாத்திரமான குட்டி பவானி என்ற கேரக்டரில் மாஸ்டர் மகேந்திரன் நடித்திருப்பார். இதில் மகேந்திரனின் நடிப்பு மிரட்டலாக இருந்தது. இந்த படத்திற்கு பிறகு மகேந்திரனுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாஸ்டர் படத்திற்கு பிறகு மகேந்திரனை சுத்தமாகவே யாரும் கண்டு கொள்ளவில்லை. அதிலும் விஜய் தம்பி தம்பி என சொல்லி கம்பி நீட்டிவிட்டார்.
Also Read: சீரியஸான கேரக்டரிலும் நடித்த சார்லியின் 5 படங்கள்.. ரீ என்டரிக்கு வாய்ப்பு கொடுத்த லோகேஷ்
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன் இரண்டு முறை சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும், நந்தி விருதையும் பெற்றிருக்கிறார். இவர் கதாநாயகனாக 2013 ஆம் ஆண்டு வெளியான விழா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
இருப்பினும் இவருடைய திறமையை இன்னும் வெளிக்காட்ட ஏதுவான டாப் இயக்குனர்களின் படம் கிடைக்கவில்லை. இருந்தாலும் மனம் தளராத மாஸ்டர் மகேந்திரன் தன்னுடைய முழு முயற்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் ஒரு நல்ல டெடிகேஷன் ஆன ஆக்டர். நன்றாக டான்ஸ் ஆட கூடியவர். குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நடித்துக் கொண்டே இருப்பவர்.
Also Read: அரசனை நம்பி புருஷனை கைவிட்ட சோக கதை.. விஜய் படத்தை நம்பி அதல பாதாளத்தில் விழுந்த மகேஷ் பாபு
இப்பொழுது சிக்ஸ் பேக் வைத்து வேறு ஒரு பரிமாணமாய் முறுக்கேற்றி நிற்கிறார். இவரை விஜய் மற்றும் விஜய் சேதுபதி தம்பி தம்பி என்று தான் அழைப்பார். இன்றுவரை விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் ஏதாவது ஒரு படத்திற்காக, மாஸ்டர் மகேந்திரனின் பெயரை சிபாரிசு செய்ததில்லை. இவர்கள் எல்லாம் தூக்கிவிட்டால் நிச்சயம் மாஸ்டர் மகேந்திரன் நல்ல நிலைமைக்கு சென்று விடுவார்.
இருப்பினும் ‘தன் கையே தனக்கு உதவும்’ என்று யாருடைய சிபாரிசும் இல்லாமல் மாஸ்டர் மகேந்திரன் தற்போது எல்.எஸ் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ராகேஷ் மாதவன் எழுதி இயக்கும் ‘நீலகண்டா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிரசாந்த் பிஜி இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: ஒரு லிமிட் மெயின்டெயின் பண்ணும் உதயநிதி.. இன்று வரை விஜய் உடன் நெருங்காத ரகசியம்