ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

எல்லோருக்கும் விரோதியாய் மாறும் விஜய் சேதுபதி.. உச்சக்கட்ட கடுப்பில் இருக்கும் தயாரிப்பாளர்

Actor Vijay Sethupathi: தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறிய நடிகர்களுள் ஒருவர் விஜய் சேதுபதி. அதிலும் இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன், வயதான மனிதன், திருநங்கை என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தி தனது இயல்பான நடிப்பை வெளிக்காட்டுகிறார்.

இதனாலேயே இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்திலும் எந்தவித ஈகோவும் இல்லாமல் குரல் கொடுத்து அசத்தினார். இருப்பினும் விஜய் சேதுபதி நிறைய படங்களில் கமிட் ஆகுவது தான் இப்போது பிரச்சினையாக இருக்கிறது.

Also Read: ஒளிச்சு வச்ச மகளை திடீரென அறிமுகப்படுத்தும் விஜய் சேதுபதி.. ஓணம் பண்டிகை வைரல் புகைப்படம்

இதனால் அவர் எல்லோருக்கும் விரோதியாக மாறிக் கொண்டிருக்கிறார் குறிப்பாக இவருடைய செய்கையால் தற்போது முன்னணி தயாரிப்பாளர் செம  கடுப்பாகி இருக்கிறார். தற்போதைய சூழலில் விஜய் சேதுபதியின் டேட்டே அவர் கையில் இல்லை.

என்னைக்கு எந்த படம் சூட்டிங் என்று கூட தெரியாமல் அல்லோலப்பட்டு வருகிறார். ஆனால் சகட்டுமேனிக்கு எல்லா படத்தையும் கமிட் செய்கிறார். ஏற்கனவே அவர் கலைப்புலி தாணு தயாரிப்பில் இயக்குனர் மிஸ்கின் உடன் ஒரு படம்  பண்ணுவதாக இருந்தது.  இன்று வரை அந்த படம் டேக் ஆஃப் ஆகவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது.

Also Read: 69 ஆவது தேசிய விருதுக்கு தேர்வான படங்கள்.. விஜய் சேதுபதி, மாதவனுக்கு கிடைத்த கெளரவம்

மிஸ்கின் கதையை ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம். ஆனால் விஜய் சேதுபதி தான் டேட் கொடுக்க மறுக்கிறார். இதனால் உச்சக்கட்டக் கடுப்பில் இருக்கிறார் கலைப்புலி தாணு. இதற்கெல்லாம் காரணம் விஜய் சேதுபதி நிதானம் இல்லாமல் செயல்படுவது தான்.

ஒரு படத்தை முடித்துவிட்டு அதன் பின் ஒரு சில படங்களில் கமிட் ஆகலாம். ஆனால் சகட்டுமேனிக்கு நிறைய படங்களில் கமிட்டாக அதுதான் இப்போது பிரச்சினையாக இருக்கிறது. இதனால் இவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் படப்பிடிப்பை துவங்க முடியாமல் உச்சகட்ட கோபத்தில் இருக்கின்றனர்.

Also Read: பகத் பாசிலின் அஸ்திவாரத்தை அசைக்க வந்த நடிகர்.. விஜய் சேதுபதி எஸ் ஜே சூர்யாவுக்கு ஏற்பட்ட கலக்கம்

Trending News