புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தெரியாம 3வது ஆளாக வந்து மாட்டிக்கிட்டேன்.. ஓவர் டார்ச்சரால் விஜய் சேதுபதிக்கு வந்த தலைவலி

விஜய் சேதுபதி சில மாதங்களுக்கு முன்பு தனக்கு வரும் அனைத்து பட வாய்ப்புகளையும் ஒப்புக்கொண்டு எல்லா இயக்குனர்களுக்கும் கால்ஷீட் கொடுத்திருந்தார். தற்போது அதே போல் ஒரு இயக்குனருக்கு கால்ஷீட் கொடுத்ததால் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டார். மேலும் இதில் இருந்து எப்படி மீள்வது என்றே தெரியாமல் உள்ளாராம்.

அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் பல வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் படம் விடுதலை. இப்படத்தில் காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் விடுதலைப் படத்தில் உள்ள கெட்டபினால் சூரி மற்ற படங்களில் நடிக்க முடியாமல் தவித்து வருகிறார். ஆனால் இன்னும் படம் வெளியான பாடு இல்லை.

இதில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். முதலில் வெற்றிமாறன் அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தது கிஷோர் குமார். ஆனால் அவர் இப்படத்தில் நடிக்க முடியாததனால் இயக்குனர் பாரதிராஜாவை நடிக்க வைக்கலாம் என எண்ணி இருந்தனர்.

ஆனால் பாரதிராஜாவின் வயதிற்கு இது சவாலாக இருக்கும் என்பதால் இப்படத்தில் இருந்து விலகி விட்டார். அதன் பிறகுதான் விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்து வருகிறார். தனது படத்தில் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கும் வெற்றிமாறன் திரும்பத் திரும்ப எடுத்த காட்சியை விஜய்சேதுபதிக்கு எடுக்க சொல்லி டார்ச்சர் கொடுக்கிறாராம்.

விஜய் சேதுபதி பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து ஒரு பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் வெற்றிமாறன் விஜய் சேதுபதியிடம் மீண்டும் மீண்டும் கால்ஷீட் கேட்டு தொந்தரவு செய்து வருகிறாராம்.

போதாக்குறைக்கு விஜய்சேதுபதி கால்ஷீட் கொடுக்காததினால் தான் விடுதலை படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் இப்படத்தில் இருந்து வெளியேறவும் முடியாமல், கால்ஷீட்டும் கொடுக்க முடியாமல் மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்து வருகிறார் விஜய் சேதுபதி.

Trending News