சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

தொடர் சிக்கல், சம்பளத்தையே விட்டு கொடுத்த விஜய் சேதுபதி.. அட! இந்த படம் செம்ம ஹிட் ஆச்சே!

Vijay Sethupathi: விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டம் வந்தது எதார்த்தமான நடிகர் என்பதற்காக மட்டுமல்ல. தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் செல்லப்பிள்ளை என்பதாலும் தான். வெற்றி என்பதை தாண்டி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு உதவ விஜய் சேதுபதி எத்தனையோ படங்கள் பண்ணியிருக்கிறார்.

இதனால் அவருக்கு தொடர் தோல்வி படங்கள் அமைந்து மார்க்கெட் சரியும் நிலை கூட ஏற்பட்டு இருக்கிறது. அதை எல்லாம் நினைத்து அவர் என்றைக்குமே வருத்தப்பட்டது இல்லை. பணம் சம்பாதிக்க சினிமாவுக்கு வந்தவர்கள் மத்தியில், தன்னுடைய ஒரு படம் ரிலீஸ் ஆவதற்காக ஒட்டுமொத்த சம்பளத்தையும் விட்டுக் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இத்தனைக்கும் அந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததுதான் இதில் ஆச்சரியமான விஷயம். விஜய் சேதுபதி என் சினிமா கேரியரில் மிகப்பெரிய படம் என்றால் அது 96 தான். பள்ளியில் படித்த மாணவர்கள் ரியூனியன் நடத்தினால் எப்படி இருக்கும் என்பதுதான் படத்தின் மையக்கரு.

சம்பளத்தையே விட்டு கொடுத்த விஜய் சேதுபதி

அதில் இருக்கும் ஒரு அழகான காதலர்கள் தான் ராம் மற்றும் ஜானு. இதில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா அந்த கேரக்டராகவே வாழ்ந்திருப்பார்கள். படம் பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. ஆனால் ரிலீசுக்கு முன்பு இந்த படம் பெரிய சோதனையை எதிர்கொண்டிருக்கிறது.

படத்தின் ரிலீஸுக்கு முன்பு மிகப்பெரிய பண சிக்கல் வந்து படம் ரிலீஸ் ஆனால் போதும் என விஜய் சேதுபதி தன்னுடைய ஒட்டுமொத்த சம்பளத்தையும் விட்டுக் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் ரிலீஸ் ஆனாலும் ஒரே நாள்தான் தியேட்டரில் தங்கும் என சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு வாரத்தை கடந்து ஓடி இருக்கிறது. படம் ரிலீஸ் ஆகி 33வது நாளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு இருக்கிறார்கள். அதையும் தாண்டி படம் தியேட்டரில் ஓடி இருக்கிறது. 77 வது நாளில் மீண்டும் இந்த படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இருக்கிறார்கள்.

ஆனால் அதையும் தாண்டி 100 நாட்களைக் கடந்து 96 படம் வெற்றி பெற்று இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் கதை திருட்டு வழக்கில் வேறு சிக்கியது. மேலும் இந்த படத்தில் இளையராஜாவின் பாடல்களை உபயோகப்படுத்திய போது இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை இளையராஜாவிடம் சந்தித்தார்.

இதையெல்லாம் தாண்டி தான் இந்த படம் இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத கதையாக இருக்கிறது. இந்த சோதனையான சம்பவத்தை மெய்யழகன் பட விழாவின் போது இயக்குனர் பிரேம்குமார் பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News