தமிழ் சினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி 13ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரைக்குவரவுள்ளது. இப்படத்தினை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஏராளமானோர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது மகளையும் சினிமாவிற்கு அழைத்து வந்துள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதி தனது மகனான சூர்யாவை சிந்துபாத் எனும் படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். இந்த படத்தில் இவரும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய் சேதுபதியும், ரெஜினா கசாண்ட்ராவும் முகில் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் தான் விஜய் சேதுபதியின் மகளான ஸ்ரீஜாவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்ய உள்ளார்.
ஏற்கனவே தனது மகனை சினிமாவில் அறிமுகம் செய்த விஜய் சேதுபதி தனது மகளையும் தற்போது சினிமாவில் அறிமுகம் செய்துள்ளார்.
![vijay sethupathi](https://www.cinemapettai.com/wp-content/uploads/2020/12/vijaysedupathi-1.jpg)
இதனால் விஜய்சேதுபதியின் ரசிகர்கள் அனைவரும் தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி மகள் இந்த படத்தில் நடித்துள்ள செய்தியை சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகின்றனர். விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
எது எப்படியோ தற்போது விஜய் சேதுபதி இந்த படத்தினை விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.