சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

தர்மதுரை 2 உருவாகிறதா? தரமான அப்டேட் கொடுத்த சீனுராமசாமி

விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தர்மதுரை. இப்படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதுவும் இப்படம் எந்த பக்கம் பாடலுக்காக தேசிய விருது பெற்றது.

விஜய்சேதுபதி திரைவாழ்க்கையில் தர்மதுரை திரைப்படம் முக்கிய படமாக உள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தை ஆர்கே சுரேஷ் தயாரித்திருந்தார். தற்போது சமூகவலைதளத்தில் தர்மதுரை படத்தின் 2 பாகம் உருவாவதாக தகவல்கள் வெளியாகின.

அதனால் ரசிகர்கள் கண்டிப்பாக விஜய் சேதுபதி படத்தில் நடிப்பார் சீனு ராமசாமி இயக்குவார் என கூறி வந்தனர். ஆனால் சீனு ராமசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தர்மதுரை 2 படத்தினைப் பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது தர்மதுரை 2 பாகம் உருவாவது மகிழ்ச்சியாக இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

ஆனால் தர்மதுரை 2 பாகம் படத்தை சீனு ராமசாமி இயக்குவதாக தகவல் வெளியாவது உண்மையில்லை. தற்போது தனது இயக்கத்தில் இடிமுழக்கம் படம் உருவாகிக்கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் தனது இப்படத்தின் அப்டேட் வெளியாகும் எனக் கூறியுள்ளார். இதனை வைத்துப் பார்க்கும் போது தர்மதுரை படத்தின் 2 பாகத்தை சீனு ராமசாமி இயக்கத்தில் என தெரிகிறது.

Seenu_Ramasamy
Seenu_Ramasamy

மேலும் இப்படத்தை சீனுராமசாமி இயக்கவில்லை என்றால் விஜய் சேதுபதி நடிக்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் தர்மதுரை படத்தின் 2 பாகம் உருவாகிறது என கூறினார்.

Trending News