மேடையில் வைத்து வெற்றிமாறனை அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி.. வாய்ப்பு கொடுக்காததால் ஏற்பட்ட விரக்த்தி

அசுரன் படத்திற்கு பின் இயக்குனர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வந்தார். இந்தப் படத்தில் நடிகர் சூரி முதல் முதலாக கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் அனல் பறக்கும் ட்ரைலர் நேற்றைய முன்தினம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. என்னதான் விடுதலை படத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதிக்கு இயக்குனர் வெற்றிமாறன் வாய்ப்பு கொடுத்தாலும், இதற்கு முந்தைய படத்தில் கூப்பிடுவார் என நினைத்து காத்திருந்து ஏமாற்றத்தை சந்தித்த விரக்த்தியில் ஏகப்பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசி கொட்டி தீர்த்திருக்கிறார். 

Also Read: தன் இனத்தை காப்பாற்ற போராடும் விஜய் சேதுபதி வாத்தியார்.. வெற்றிமாறனின் விடுதலை பார்ட் ஒன் ட்ரெய்லர்

விஜய் சேதுபதி விடுதலை பட விழாவின்போது மேடையிலேயே வெற்றிமாறனை வைத்துக்கொண்டு வடசென்னை படத்தை பார்க்கவில்லை என்று கூறினார். அந்த படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன் வாய்ப்பு தரவில்லை. அதனால் அந்த படத்தை இன்று வரை நான் பார்க்கவில்லை என்று கூறினார்.

இது சிரித்துக் கொண்டே கூறினாலும், அவருடைய மனதில் உள்ளது தான் என்று நன்றாக தெரிகிறது. அதேபோல் வடசென்னை பார்ட் 2 எப்போது வரும் என கேட்டதற்கு, கதை எழுதிக் கொண்டிருக்கிறார் வரும் என நக்கலாக கூறினார். 

Also Read: தயாரிப்பாளர் செய்த முட்டாள்தனத்தாம்.. விஜய் சேதுபதிக்கு வந்த பேராபத்து, தலை தப்புமா.!

அதில் நீங்கள் நடிப்பீர்களா என கேட்டதற்கு, ‘வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறேன், தெரியவில்லை’ என்றும் கூறியிருந்தார். விஜய் சேதுபதி இவ்வளவு பேசிய பிறகு வெற்றிமாறன் நிச்சயம் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தில் ஏதாவது ஒரு கேரக்டரில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்து விடுவார்.

ஆனால் சூப்பர் ஹிட் படமான வடசென்னை படத்தை பார்க்கவே இல்லை என்று வெற்றிமாறனை அசிங்கப்படுத்தியது தான் சரி இல்லை. மனதில் பட்டதை நேராக கூறுவார் விஜய் சேதுபதி, அதற்காக வெற்றிமாறனின் முகத்திற்கு நேராகவே சொல்லி தன்னுடைய மன வருத்தத்தை கூறியது நன்றாக இல்லை என கூறி வருகின்றனர்.

Also Read: ஆயிரக்கணக்கான பாடல்களில் இது தனித்து நிற்கும்.. மாத்தி மாத்தி புகழ்ந்து தள்ளிய வெற்றிமாறன், இளையராஜா