புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சன் டிவியில் நேரடியாக வெளியாகும் விஜய் சேதுபதியின் புதிய படம்.. உங்களுக்கே இந்த நிலைமையா.?

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார், இடம் பெருள் ஏவல், காத்துவாக்குல இரண்டு காதல், மாமனிதன், கடைசி விவசாயி மற்றும் லாபம் ஆகிய படங்கள் கிட்டத்தட்ட முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.

இதில் துக்ளக் தர்பார் படத்தின் ஒளிபரப்பு உரிமையை முன்னதாக ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. பின்னர் சில காரணங்களால் இந்த உரிமை சன் டிவிக்கு மாற்றப்பட்டது.

ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் திரையரங்குகள் இன்னும் திறக்காததால் துக்ளக் தர்பார் படம், விநாயகர் சதூர்த்தியை அன்று செப்டம்பர் 9ஆம் தேதி சன் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அதே நாளில் நெட்பிளிக்ஸ் இணையதளத்திலும் வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி உள்ளார்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் சேதுபதியுடன் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

Thuglaq Darbar

Trending News