புதன்கிழமை, மார்ச் 19, 2025

கையெடுத்து கும்பிட்டு அனுப்பிய விஜய் சேதுபதி.. போன வேகத்தில் திரும்பிய கௌதம் மேனன்

விண்ணைத்தாண்டி வருவாயா அதைத்தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களை தொடர்ந்து 3வது முறையாக சிம்பு- இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் இணைந்து உருவாகும் படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் பக்காவாக முடிந்தது என்று சொல்லலாம்.

ஒரு பக்கம் பார்த்தால் படத்தை சோதபுவதில் இவர்கள் இருவருமே கில்லாடி. இவர்கள் கூட்டணியில் இந்த படம் சொதப்பாமல் வந்ததே பெரிய விஷயம். இந்த படத்திற்கு பின்னர் கௌதம் வாசுதேவ் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.

மீண்டும் சிம்புவை வைத்து எடுக்க வேண்டுமா என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது போல, அதனால் இந்த படத்திற்கு வேறு ஒரு ஜோடியை போட வேண்டும் என திட்டம் போட்டு வைத்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன் மனதில் தோன்றியது அந்த வெற்றி ஜோடிகளில் தான் கண் முன் வந்திருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா காம்போ 96 படத்தில் கலக்கியது. இதை மனதில் வைத்த கௌதம் வாசுதேவ்மேனன் விஜய் சேதுபதியை அணுகியிருக்கிறார். அந்தப்படத்தில் இணையாத ஜோடிகளை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் ஜோடி சேர்த்து ஹிட் கொடுக்கலாம் என்று நினைத்திருப்பார் போல.

ஆனால் விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் த்ரிஷா தான் இந்தப்படத்திற்கு ஏற்ற ஜோடி என கௌதம் வாசுதேவ்மேனனை கையெடுத்துக் கும்பிட்டு திருப்பி அனுப்பிவிட்டாராம். விஜய் சேதுபதி இப்படி சொல்வார் என்பதை கௌதம்வாசுதேவ் மேனன் கனவிலும் நினைக்கவில்லை.

‘அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும், கிள்ளுறவ பக்கத்துல இருக்க கூடாது’ என்பதுபோல விண்ணைத்தாண்டி வருவாயா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து படம் என்றால், அந்த படத்தின் 2வது பாகத்தில் கௌதம்மேனன்-சிம்பு அவர்களது கூட்டணியில் இருக்கக்கூடாது என விஜய் சேதுபதி திட்டவட்டமாக இருக்கிறார்.

Advertisement Amazon Prime Banner

Trending News