Biggboss 8 Elimination: பிக்பாஸ் நிகழ்ச்சியில் டபுள் எவிக்சன் எப்போது என ஆடியன்ஸ் ஆர்வத்தோடு கேட்டு வந்தனர். ஆனால் அது சில வாரங்களாக நடக்கவில்லை.
அந்த தருணம் இப்போது வந்துவிட்டது. இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு இரண்டு பேர் வெளியேற உள்ளனர் இந்த வாரம் நாமினேஷனில் மொத்தமாக 12 பேர் சிக்கினார்கள்.
அதில் முத்துக்குமரன் அதிக ஓட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதேபோல் கடைசி இடத்தில் சாச்சனா குறைவான ஓட்டுகளை பெற்றிருந்தார்.
ஜோடியாக வெளியேறிய ஆனந்தி சாச்சனா
ஆனால் விஜய் சேதுபதி எப்படியும் அவரை காப்பாற்றி விடுவார், வேறு ஒருவர் தான் இந்த வார பலியாடாக இருப்பார்கள் என பிக் பாஸ் ஆடியன்ஸ் கூறிவந்தனர்.
ஆனால் இன்று எல்லோரும் எதிர்பார்த்த சாச்சனா வெளியேறி இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக ஆனந்தியையும் பிக்பாஸ் டீம் வெளியேற்றி உள்ளது.
இவர்கள் இருவருமே பார்வையாளர்களின் வெறுப்புக்கு ஆளானவர்கள் தான். அக்கா, தங்கையாக பாசம் காட்டி வந்த இவர்கள் தற்போது கூட்டாக வெளியேறி இருக்கின்றனர்.
மேலும் கோவா அணியின் அட்டகாசத்தை விஜய் சேதுபதி வெளுத்து விட்டார். அதனால் வரும் வாரத்தில் ஆட்டம் நினைத்ததை விட சுவாரசியமாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.