புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகர்.. டீடோட்லராக வாழ்ந்த விஜய் சேதுபதி பட சிரிப்பு வில்லன்

Vijay Sethupathi: பொதுவாக சினிமாவில் உள்ள பிரபலங்களை பற்றி கிசுகிசுக்கள் வெளியாவது சர்வ சாதாரணம் தான். அவர்கள் தப்பே செய்யவில்லை என்றாலும் சில சமயங்களில் பிற நடிகைகளுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சிலர் மட்டும் இதுவரை கிசுகிசுக்களில் சிக்காமல் உள்ளனர்.

அவ்வாறு சினிமாவில் ஹீரோவாக இருந்த சிவகுமார் எந்த கிசுகிசுக்களிலும் சிக்காமல் இருந்தார். இவரைப்போல வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தாலும் தற்போது வரை எந்த ஒரு கிசுகிசுகளிலும் சிக்கவில்லை. அதோடு மட்டுமல்லாமல் மது சிகரெட் என எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் டீடோட்டலராக வாழ்ந்துள்ளார்.

Also Read : ரஜினியை ஏமாற்றிய தயாரிப்பாளர்.. லட்சத்தில் சம்பளம் வாங்கிய முதல் படம்

அதுவும் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த இவர் இப்போது காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். அதாவது 80களில் கொலை நடுங்க வைக்கும் வில்லனாக மிரட்டி இருந்தவர் தான் ஆனந்த்ராஜ். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக ஆனந்த்ராஜ் நடித்திருந்தார்.

அதுமட்டுமின்றி சூரிய வம்சம் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக தேசிய விருதையும் ஆனந்த்ராஜ் பெற்று இருக்கிறார். இவ்வாறு டெரர் வில்லனாக இருந்த இவரை வெங்கட் பிரபு கோவா படத்தின் மூலம் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார்.

Also Read : வில்லனாக நடிக்க இத்தனை கோடியா.. விஜய் சேதுபதிக்கு வாரி வழங்கிய ஷாருக்கான்

இதுவும் அவருக்கு பக்காவாக பொருந்தி விட்டது. ஆகையால் தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களிலேயே ஆனந்த்ராஜ் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார்.

இவர் இதுவரை எந்த ஒரு கிசு கிசு விழும் சிக்காமல் இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் எந்த ஒரு கெட்ட பழக்கமும் ஆனந்த்ராஜுக்கு கிடையாதாம். மேலும் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜத்தில் பலருக்கு உதவி செய்யக்கூடிய நல்ல குணம் உடையவராக இருந்து வருகிறார் ஆனந்தராஜ்.

Also Read : மாவீரனை தூக்கி நிறுத்திய விஜய் சேதுபதி.. குரல் கொடுத்ததற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.!

Trending News