திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வேதாவை மிஞ்சும் கேங்ஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன்.. மைக்கேல் டீசர் விமர்சனம்

ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது மைக்கேல் என்ற திரைப்படத்தில் பவர்ஃபுல் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு பட ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

பிரபல நடிகர் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். தனுஷ் இப்படத்தின் டீசரை வெளியிட்டு பட குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Also read:7 வருடங்களாக கிடப்பில் இருக்கும் விஜய் சேதுபதியின் திரைப்படம்.. ரிலீஸை உறுதி செய்த இயக்குனர்

கரன் சி புரொடக்ஷன் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார். பக்கா கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் இருவரின் கதாபாத்திரமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் விஜய் சேதுபதி விக்ரம் வேதா திரைப்படத்தை நினைவூட்டுகிறார். கேங்ஸ்டர் திரைப்படத்திற்கு உரிய ஆக்சன் காட்சிகளும், ரத்தம் தெறிக்கும் பயங்கரமான காட்சிகளும் மிரட்டலாக இருக்கிறது. படத்தின் பின்னணி இசையும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Also read:இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்.. கூட்டணி போட தயாராகும் விஜய் சேதுபதி

ரத்தக்கரை படிந்த குழந்தையின் பாதம், உறைய வைக்கும் சண்டை காட்சிகள் என்று இந்த படம் பான் இந்தியா திரைப்படத்திற்கு உரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் பெரிய அளவில் வசன காட்சிகள் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் மட்டுமே கலந்திருக்கும் இந்த டீசர் தற்போது வரவேற்பை பெற்று வருகிறது.

அதிலும் டீசரின் இறுதி காட்சியில் மன்னிக்கும் போது நாம் கடவுள் ஆகிறோம் என்ற ஒரு குரலுக்கு, ஹீரோ நான் மனிதனாகவே இருக்கிறேன் கடவுளாக வேண்டாம் என்று சொல்கிறார். இதுவே படம் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தி விடுகிறது. அந்த வகையில் சமீப காலமாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் கௌதம் மேனன் மற்றும் வெறித்தனமான கதைகளை தேர்ந்தெடுத்து வரும் விஜய் சேதுபதி இருவரும் இந்த படத்தின் மூலம் நம்மை மிரட்ட இருக்கின்றனர்.

Also read:கம்மி பட்ஜெட், ஹாட்ரிக் லாபத்தை அசால்டாக பார்த்த விஜய் சேதுபதி.. 6 சூப்பர் ஹிட் படங்களின் லிஸ்ட்

Trending News