Vijay Sethupathi: விஜய் சேதுபதி தற்போதைய நடிகர்களில் ஒருவராக பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். ஆனால் இவர் அடிமட்ட நடிகரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது ஆலமரம் போல் உயர்ந்து நிற்கிறார். ஆரம்பத்தில் புதுப்பேட்டை படத்தில் போதை பொருள் விற்கும் அடிமட்ட ரவுடிகளில் ஒருவராக நடித்தவர்.
அதன் பின் சப்போர்ட்டிங் கேரக்டர், வில்லன், நடிகர் என்று பல பரிமாணங்களில் படையெடுத்து வருகிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று இமேஜை தக்க வைத்துக் கொள்ளாமல், இவரை தேடி எந்த கேரக்டர் வந்தாலும் அதை ஏற்று நடிக்க கூடிய ஒருவராக இருக்கிறார்.
Also read: ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த விஜய் சேதுபதியின் ஜவான் பட போஸ்டர்.. ஷாருக்கானுக்கு வில்லனா சும்மாவா
அதனாலயே தற்போது பாலிவுட், டோலிவுட் என எல்லாத்திலும் நடிப்பை அசத்திக் கொண்டு வருகிறார். ஆரம்பத்தில் செலவுக்கு கொஞ்சமாவது காசு கிடைக்காதா என்று சினிமாவை நம்பி அண்டி வந்த விஜய் சேதுபதி, இவருடைய நடிப்பால் இன்றைய சூழலில் இவரிடம் இல்லாத சொகுசு கார்களை இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.
இவரிடம் எத்தனையோ சொகுசு கார்கள், சொத்துகள் இருந்தாலும் இவர் ஆசை ஆசையாய் முதன் முதலில் வாங்கிய கார் லான்சர் வகை கார். இப்படிப்பட்ட இந்த காரை இவருடைய நண்பருக்கு தாரவார்த்து கொடுத்து விட்டார். இவருடைய நண்பர் யார் என்றால் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த தர்மத்தின் தலைவன் படத்தில் தம்பியாக நடித்த சௌந்தர் ராஜா. இந்த படத்தில் அண்ணன் என்று கூட பாராமல் விஜய் சேதுபதியை ஏமாற்றி துரோகம் செய்திருப்பார்.
Also read: சூது கவ்வும் ஸ்டைலில் உருவாகும் விஜய் சேதுபதியின் அடுத்த படம்.. ஜோடியாகும் பாலிவுட் நடிகை
அத்துடன் சுந்தர பாண்டியன் படத்தில் பரஞ்ஜோதி கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். அப்படிப்பட்ட இவர் ஒரு முறை தர்மத்தின் தலைவன் படத்தின் சூட்டிங் சமயத்தில் சௌந்தர் ராஜாவின் கார் ஒரு விபத்தில் எரிந்து விட்டதாம். இதை கேள்விப்பட்ட விஜய் சேதுபதி அவருக்கு உடனே தன் ஆசைப்பட்டு முதன் முதலில் வாங்கிய லான்சர் காரை அவருக்கு கிப்ட்டாக கொடுத்திருக்கிறார்.
இது உண்மையில் பாராட்டக்கூடிய விஷயமாகத்தான் இருக்கிறது. அதற்கு காரணம் எத்தனையோ முன்னணி நடிகர்கள் அவர்களுக்கு கீழே வேலை பார்ப்பவர்கள் என்னென்ன கஷ்டங்கள் படுகிறார்கள் என்று நன்றாகவே தெரியும். ஆனாலும் அதைக் கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் விஜய் சேதுபதியோ இந்த விஷயத்தில் பரந்த மனசுடன் நண்பருக்கு உதவி செய்திருக்கிறார்.
விஜய் சேதுபதி நண்பருக்கு கொடுத்த லான்சர் கார்