வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வரிசையாக தோல்வி.. கேரியர் பயத்தில் விஜய் சேதுபதி எடுத்த திடீர் முடிவு

தமிழ்சினிமாவில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் சூதுகவ்வும் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என வித்தியாச வித்தியாசமான கதைகளை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்தவர் விஜய் சேதுபதி. இன்று எனக்கு கூட நேரமில்லாத அளவுக்கு கைவசம் பல படங்களை வைத்து தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவராக பார்க்கப்பட்ட விஜய் சேதுபதியின் கடைசி சில படங்களை பார்த்த ரசிகர்கள் தயவு செய்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்குமாறு விஜய்சேதுபதிக்கு சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த அளவுக்கு மோசமான படங்களில் நடித்து வருகிறார்.

முன்னரெல்லாம் விஜய்சேதுபதி படத்தை ஒன்றுக்கு இரண்டு முறை பார்க்கலாம் என்று இருந்த நேரத்தில் இப்போதெல்லாம் ஒரு முறை கூட உட்கார்ந்து பார்க்க முடியாது என்கிற அளவுக்குத் தான் இருக்கிறது. எதற்காக இப்படி கதைகளில் கவனம் செலுத்தாமல் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பது தெரியாமல் ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இப்போதெல்லாம் விஜய் சேதுபதி 10 படம் ரிலீஸ் செய்தால் அது ஒரு படம் மட்டும் தான் வெற்றி பெறுகிறது என்றால் பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.

சமீபத்தில் இந்த விமர்சனங்களை கேள்விப்பட்ட விஜய் சேதுபதி இனி நல்ல நல்ல கதைகளில் நடித்து மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் எப்போதுமே உடல் எடையை பற்றி கவலை படாமல் இருந்த விஜய்சேதுபதி இப்போதெல்லாம் விடியற்காலையில் விருட்டென எழுந்து ஜிம்முக்கு போகிறார் என்கிறார்கள் அவருடைய வட்டாரங்கள்.

vijay-sethupathy-1
vijay-sethupathy-1

இந்த மாற்றம் கண்டிப்பாக விஜய்சேதுபதியின் படங்களிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கலாம். விஜய் சேதுபதி சார் உங்க நடிப்பில் ஒரு நல்ல படத்தை பார்த்து ரொம்ப நாளாச்சு. எப்போதான் அந்த மாதிரி திரும்ப நல்ல நல்ல படங்கள் கொடுப்பீங்க என்ற ஆர்வத்தில் என்றும் உங்கள் ரசிகனாய் இந்த பதிவு.

Trending News