புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதா.. விஜய் சேதுபதி செய்தது சரியா.?

Vijay Sethupathi: பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்த பிறகு கொஞ்சம் சுவாரஸ்யம் கூடி இருக்கிறது. ஏனென்றால் வளவள கொழ கொழ என பேசாமல் நெற்றிப்பொட்டில் அடித்தது போல் இருக்கிறது அவருடைய பேச்சு.

அதிலும் போட்டியாளர்களை வாயடைக்க வைக்கும் அளவுக்கு அவர்களை மடக்கும் விதமும் நக்கல் அடிக்கும் விதமும் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறது. ஆனாலும் இதுவே தொடர்ந்தால் அவர் சில விமர்சனங்களை சந்திக்க வேண்டும் என ஏற்கனவே ஒரு கருத்து இருந்தது.

அதுதான் தற்போது நடந்துள்ளது. அதாவது வார இறுதியில் அவர் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் நன்றாகவே இருக்கிறது. அதிலும் இந்த வாரம் பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் ரோஸ்ட் செய்து விட்டார்.

இதில் அதிக ஆப்பு வாங்கியது வீட்டை விட்டு வெளியேறிய அர்ணவ் தான். பிக்பாஸ் மேடையில் பெண் போட்டியாளர்களை அவர் உயர்வாக பேசியதும் ஆண்களை தர குறைவாக பேசியதும் நிச்சயம் கண்டிக்கத்தக்கது.

விஜய் சேதுபதிக்கு எதிராக கிளம்பிய விமர்சனம்

அதைத்தான் விஜய் சேதுபதி செய்தார். உங்கள் வன்மத்தை இங்கு காட்ட வேண்டாம். மரியாதையை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும். வீட்டுக்கு போய் நல்லா சாப்பிட்டு படம் பார்த்து ரிலாக்ஸ் ஆகுங்க என சரியான அறிவுரையை கொடுத்தார்.

ஆனால் சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்த அர்ணவை நேரடியா விஷயத்துக்கு வாங்க என தூண்டி விட்டதே அவர்தான். அதன் பிறகு தான் அவருடைய பேச்சு மாறியது. அதேபோல் போட்டியாளர்களின் விளையாட்டிலும் இவர் சம்பந்தமில்லாமல் மூக்கை நுழைப்பது போல் உள்ளது.

இது ஆட்டத்தை அப்படியே மாற்றிவிடும். மேலும் போட்டியாளர்கள் பேசுவதை முழுமையாக கேட்கும் பொறுமையும் அவரிடம் இல்லை. அவ்வப்போது எரிச்சல் அடைகிறார். இது அவருடைய முகத்தில் வெளிப்படையாக தெரிகிறது.

இதையெல்லாம் அவர் கொஞ்சம் சரி செய்து விட்டால் நிகழ்ச்சி இன்னும் சுவாரசியமாக கூடும். சில வாரங்கள் அவருடைய இந்த அதிரடியை மக்கள் ரசிக்கலாம். ஆனால் போட்டியாளர்களுக்கு அதிருப்தி வந்துவிடும். இரண்டையும் சரிசமமாக கையாள வேண்டும். அதையும் விஜய் சேதுபதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News