திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சேர்த்து வைத்த மொத்த பெயரையும் கெடுத்துக்கொண்ட விஜய் சேதுபதி.. அந்தரங்க காட்சியில் நடித்ததால் ஏற்பட்ட விளைவு

Vijay Sethupathi: விஜய் சேதுபதி ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்புக்காக அலைந்து கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு படிப்படியாக முன்னேறி இப்போது முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் பாலிவுட் வரை அவரது புகழ் சென்று இருக்கிறது.

மேலும் விஜய் சேதுபதியின் இந்த வளர்ச்சிக்கு காரணம் எந்த பந்தாவும் இல்லாமல் இருப்பதுதான். அதுமட்டுமின்றி அவர் தமிழர் என்பதால் நாம் பழகிய ஒருவர் போல் விஜய் சேதுபதி இருப்பது பிளஸ் பாயிண்ட்டாக அமைகிறது. மேலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தயங்காமல் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

Also Read : சூது கவ்வும் ஸ்டைலில் உருவாகும் விஜய் சேதுபதியின் அடுத்த படம்.. ஜோடியாகும் பாலிவுட் நடிகை

விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த நிலையில் இப்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் குரல் கொடுத்திருக்கிறார். மற்ற நடிகர்கள் இதை செய்வார்களா என்பது சந்தேகம்தான். இப்படி ஒவ்வொரு படியாக வளர்ச்சி அடைந்து விஜய் சேதுபதி சேர்த்து வைத்த மொத்த பெயரையும் ஒரே படத்தால் கெடுத்துக் கொண்டுள்ளார்.

அதாவது ஓடிடி தளத்திற்காக பார்சி என்ற வெப் தொடரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை ராசி கண்ணாவும் நடித்திருந்தார். இந்த சூழலில் இதுவரை விஜய் சேதுபதி மோசமான காட்சிகளில் நடித்ததில்லை. ஆனால் இந்த வெப் தொடரில் படுமோசமாக நடித்திருக்கிறார்.

Also Read : கமலை போல விஜய் சேதுபதிக்கு நடக்கும் சதி, சேற்றை வாரி இறைக்கும் பாலிவுட்.. இதே பொழப்பாகத் திரியும் பிரபலம்

இதை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதியா இது என்று ஆச்சரியத்தில் உறைந்து இருக்கிறார்கள். ஏனென்றால் இதுவரை மிகவும் கண்ணியமான கதாபாத்திரங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய் சேதுபதி பணத்திற்காக இவ்வாறு செய்து உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் ஓடிடியை பொருத்தவரையில் இதுபோன்ற அந்தரங்க காட்சிகள் வைத்தால் மட்டுமே கல்லா கட்ட முடியும். அதனால் தான் ஓடிடியில் இது போன்ற வெப் சீரிஸ் அதிகமாக வெளியாகி வருகிறது. ஆனாலும் விஜய் சேதுபதி இதில் நடிக்காமல் தவிர்த்து இருக்கலாம் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Also Read : கேத்ரினா கைஃப்-க்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்தாரா விஜய் சேதுபதி.? பயில்வான் போல் போட்டுடைத்த பிரபலம்

Trending News