Vijay Sethupathi: விஜய் சேதுபதி ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் அதன் பிறகு ஹீரோ அந்தஸ்தை பெற்றார். அதுவும் கிராமத்து கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்த நிலையில் அதன் பிறகு எல்லாவித படங்களிலும் நடிப்பது போல் தன்னை வளர்த்துக் கொண்டார். மேலும் டாப் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.
இதைத்தொடர்ந்து படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஹீரோக்கள் தயங்குவார்கள். ஆனால் ஹீரோ வில்லனாகவும் நடித்து ரசிகர்களை கவர முடியும் என்ற ட்ரெண்டை உருவாக்கியது விஜய் சேதுபதி தான். ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் மற்றும் கமலின் விக்ரம் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.
Also Read : விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன வர்மன்.. இயக்குனராக எடுக்கும் புது ஆதாரம்
போதாக்குறைக்கு பாலிவுட்டில் சென்று ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து மிரட்டி இருக்கிறார். இந்த சூழலில் இப்போது பெரும்பாலான படங்களில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி அழைக்கப்படுகிறார். அந்த வகையில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள இறைவன் படத்தின் விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய விஜய் சேதுபதி நான் ஜெயம் ரவியின் படத்தில் நடித்த போது 400 ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக கூறியிருக்கிறார். அதாவது ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற படத்தில் விஜய் சேதுபதி சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் தான் தனக்கு 400 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது.
Also Read : அந்த நடிகை எனக்கு பொண்ணு மாதிரி, ஜோடி சேர முடியாது.. சூப்பர் ஸ்டாருக்கு புத்திமதி சொல்லும் விஜய் சேதுபதி
இதற்கு முன்னதாக வெறும் 200 ரூபாய் மட்டும் தான் சம்பளம் வாங்கினேன் என வெளிப்படையாக விஜய் சேதுபதி கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் அதன் பிறகு முன்னணி நடிகராக வந்தவுடன் ஜெயம் ரவி படத்திலும் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விஜய் சேதுபதியை தேடி வந்ததாம். ஆனால் அந்த படத்தில் நடிக்க மிகவும் ஆசை இருந்த போதும் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அதாவது ஜெயம் ரவி நடிப்பில் வெளியான போகன் படத்தில் தான் விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. மேலும் ஒரு நடிகரின் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இன்று அவரையே விழாவை சிறப்பிக்க வைக்கும் அளவிற்கு விஜய் சேதுபதி வளர்ந்து இருக்கிறார். வந்த நிலை மறக்காமல் பழசை நினைவு கூர்ந்து விஜய் சேதுபதி சொன்னதே அவர் இன்னும் பல உயரங்கள் அடைவார்.
Also Read : தோல்வியை முறியடிக்க மகாராஜாவாக மாறிய விஜய் சேதுபதி.. யோகி பாபு லெவலுக்கு இறங்கிய 50வது படம்