புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தோல்வியை முறியடிக்க மகாராஜாவாக மாறிய விஜய் சேதுபதி.. யோகி பாபு லெவலுக்கு இறங்கிய 50வது படம்

Actor Vijay Sethupathy: மாதத்திற்கு ஒரு படத்தை ரிலீஸ் செய்யும் அளவுக்கு விஜய் சேதுபதி பிஸியாக நடித்து வருகிறார். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் நடிப்புக்கு சவால் விடும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பது தான் இவருடைய இயல்பு.

அதனாலேயே இவருடைய சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போயிருக்கிறது. அதை தொடர்ந்து வில்லன், குணச்சித்திரம் போன்ற கேரக்டர்களிலும் இவர் நடிக்க தொடங்கினார். இருப்பினும் அவரை சோலோ ஹீரோவாக பார்ப்பதற்கு தான் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Also read: யாரும் வாங்கல, தியேட்டரிலும் மதிக்கல முடங்கி கிடந்த விஜய் சேதுபதியின் 5 படங்கள்.. ரூட்டை மாத்திய மக்கள் செல்வன்

அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா தாறுமாறாக தயாராகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மரண மாஸாக இருந்த நிலையில் தற்போது அவருடைய கதாபாத்திரம் என்ன என்பதும் தெரிய வந்துள்ளது.

நித்திலன் இயக்கத்தில் மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப் நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி முடி வெட்டுபவராக நடிக்கிறாராம். முதல் முறையாக இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அவர் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருப்பதாக இயக்குனரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Also read: வெற்றிமாறனுக்கு டிமிக்கி கொடுக்கும் விஜய் சேதுபதி.. சூர்யா படத்தில் கைவைத்த கொடுமை

அதனாலேயே இப்படம் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் தற்போது இப்படம் சம்பந்தப்பட்ட போட்டோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் விஜய் சேதுபதி தேசிய விருதுக்கு தயாராகி விட்டார் என்றே சொல்லலாம்.

அப்படித்தான் இருக்கிறது அவருடைய தோற்றமும், பார்வையும். அந்த வகையில் மண்டேலா படத்தில் யோகி பாபு முடி வெட்டுபவராக நடித்து பாராட்டுகளை பெற்றார். அதேபோன்று இறங்கி இருக்கும் விஜய் சேதுபதி தன்னுடைய முந்தைய தோல்விகளை முறியடித்து மகாராஜாவாக மகுடம் சூடுவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: வில்லன் பஞ்சத்தை தீர்க்க வந்த 5 பலே கில்லாடிகள்.. விஜய் சேதுபதி மார்க்கெட்டை உடைக்கும் வர்மன்

Trending News