செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மிஷ்கின் சொன்னால் குட்டி போட்ட பூனை போல் பின்னால் வரும் விஜய் சேதுபதி.. மாவீரனில் செய்த உதவி

Maaveeran: மிஷ்கின் என்னதான் சொக்குபொடி போட்டு மயக்கினாரோ என்னவோ அவர் பேச்சுக்கு இணங்க குட்டி போட்ட பூனை போல் பின்னால் வருகிறார் விஜய் சேதுபதி. ஒரு காலகட்டத்தில் இயக்குனராக வெற்றி படங்களை கொடுத்து வந்த மிஷ்கின் இப்போது நடிகராக, அதுவும் வில்லனாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இதன் மூலம் இவர்களுக்குள் ஒரு நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி பாலிவுட் படமான மெர்ரி கிறிஸ்மஸ் படத்தில் நடித்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் மிஷ்கின் பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பிலிருந்து விடுப்பு கேட்டு விட்டு சென்னை வந்தார்.

Also Read : உயிரோடு இருக்கும் வரை தான் மரியாதை, இறந்த பிறகு கண்டுக்காத சூர்யா.. ஓடோடி வந்த விஜய் சேதுபதி

அந்த அளவுக்கு மிஷ்கின் மீது மிகுந்த மரியாதை மற்றும் பாசத்தை விஜய் சேதுபதி வைத்திருக்கிறார். இந்நிலையில் டாப் ஹீரோக்கள் செய்யாத ஒரு விஷயத்தை மிஷ்கின் கேட்டுக் கொண்டதால் விஜய் சேதுபதி செய்திருக்கிறார். அதாவது மிஸ்கின் இப்போது வில்லனாக மாவீரன் படத்தில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த ட்ரெய்லரில் மிகவும் பயந்த சுபாவம் கொண்ட சிவகார்த்திகேயன் வானத்தைப் பார்க்கும்போது அவருக்குள் சக்தி ஏற்படுகிறது.

Also Read : விஜய் சேதுபதி பட மகளுக்கு டார்ச்சர் கொடுத்த ஸ்டார் ஹீரோவின் மகன்.. வெட்ட வெளிச்சமான உண்மை

இதற்கு காரணம் மேலே இருந்து ஒரு குரல் சிவகார்த்திகேயனுக்கு கேட்கும்படி ஒலிக்கிறது. ஆரம்பத்தில் இந்த குரலை கொடுக்க கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எல்லோருமே மறுப்பு தெரிவித்து விட்டனர். அதன் பிறகு மிஷ்கின் விஜய் சேதுபதி இடம் நீதான் இந்த படத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உடனே எந்த தயக்கமும் இன்றி மாவீரன் படத்திற்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி இடையே தான் போட்டி போய்க் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் சூழ்நிலையிலும் குருநாதர் மிஷ்கின் கேட்டுக் கொண்டதால் ஒரு கணம் கூட யோசிக்காமல் விஜய் சேதுபதி இதை செய்துள்ளார்.

Also Read : கடைசி படத்துல என்னைய வச்சா சம்பவம் செய்யணும்.. உதயநிதியால் கொலவெறியில் சிவகார்த்திகேயன்

Trending News