விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வந்தாலும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் வில்லனாக நடிக்கவும் தயங்குவதில்லை.
அந்த வகையில் பேட்ட படத்தின் மூலம் வில்லனாக களமிறங்கினார் விஜய் சேதுபதி. ஆனால் அந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை. இரண்டாவது கட்ட வில்லன் போலவே வலம் வந்தார்.
ஆனால் மாஸ்டர் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை சரியாக தெரிந்து கொண்டு அதிரடியாக களமிறங்கி தற்போது இந்திய சினிமாவையே மிரட்டி விட்டுவிட்டார். விஜய் சேதுபதி செல்லும் இடமெல்லாம் பவானி கதாபாத்திரத்தைப் பற்றி தான் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவையுடன் கொடூர வில்லத்தனத்தை காட்டி வில்லன்களாக கலக்கிய பிரகாஷ்ராஜ் மற்றும் கலாபவன் மணி ஆகியோரைப் போல மாஸ்டரில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ரசிக்கும்படி அமைந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரும் விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்தை பார்த்து மிரண்டு விட்டார்களாம். இதனால் தற்போது பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து சினிமாவிலும் விஜய் சேதுபதி முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தால் சரியாக இருக்கும் என கருதுகிறார்களாம்.
சமீபத்தில்கூட பாலிவுட்டில் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு வெப்சீரிஸ் ஒன்றுக்கு அதன் ஹீரோவை விட ஒரு மடங்கு அதிகமாக சம்பளம் வாங்குகிறார் என்பதும் கூடுதல் தகவல். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் அவரை தேடி வருகிறது. மேலும் விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயம்.
அதற்கு விரைவில் வெளியாக உள்ள உப்பண்ணா படத்தின் டிரைலர் தான் காரணமாம். அதிலும் மாஸ்டர் பவானி போல விஜய் சேதுபதிக்கு மிகவும் கொடூர வேடமாம். இன்னும் சில மாதங்களில் விஜய் சேதுபதி இந்திய சினிமாவே போற்றப்படும் நடிகராக வலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். இதன் அனைத்து பெருமையும் லோகேஷ் கனகராஜையே சேரும்.