வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அசோக் செல்வனை கொன்றுவேன்னு மிரட்டிய விஜய் சேதுபதி.. காரணத்தைக் கேட்டு வியந்த போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தெகிடி, ஓ மை கடவுளே, சூது கவ்வும் போன்ற மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டுபவர் தான் நடிகர் அசோக் செல்வன். தற்போது அசோக் செல்வன் ‘தீனி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தை எஸ் வி சி சி சார்பில் பிரசாத் தயாரித்து, அணி சசி இயக்கி, ராஜேஷ் முருகேசன் இசையமைத்து உள்ளார். நித்யாமேனன், ரிது வர்மா, நாசர் ஆகியோர் இணைந்து நடிக்க, காமெடி ரொமான்டிக் படமாக தயாராகி இருப்பது தான் தீனி. இந்தப் படம் நேரடியாக ஜி ஃப்ளெக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது ரிலீசாகி உள்ளது.

இந்நிலையில் அசோக் செல்வன் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக படங்களில் கமிட் ஆகுவதற்கு விஜய் சேதுபதி தான் காரணம் என்ற உண்மையை பேட்டி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் 2 வருடத்திற்கு ஒரு படம் அல்லது வருடத்திற்கு ஒரு படம் என மிக கவனமாக தேர்வு செய்து நடித்துக்கொண்டிருந்த அசோக் செல்வனை விஜய் சேதுபதி, ‘கொன்று வேண்டா, இனிமேல் தொடர்ந்து படம் பண்ணு, அப்பொழுது தான் சினிமாவில் காலூன்ற முடியும்’ என்ற அறிவுரையை வழங்கியுள்ளார்.

vjs-ashok-selvan-1
vjs-ashok-selvan-1

அதன் பின்புதான் தற்போது அசோக் செல்வன், இந்த வருடத்தில் இருந்து தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். ஆகையால் ஒரு சில படங்களில் விஜய் சேதுபதியும் அசோக்செல்வன் இணைந்து நடித்திருந்ததால், அண்ணன் ஸ்தானத்தில் விஜய் சேதுபதி பல அறிவுரைகளை அசோக் செல்வனுக்கு கொடுத்து வருகிறாராம்.

எனவே தெகிடி அசோக் செல்வனின் இந்த மனமாற்றத்திற்கு விஜய்சேதுபதி தான் காரணம் என்பதை அறிந்த ரசிகர்களுக்கு, விஜய் சேதுபதி மீது தனி மரியாதையே உருவாக்கி வருகிறதாம்.

Trending News