புதன்கிழமை, ஜனவரி 15, 2025

லியோ படத்தில் இணைந்த விஜய் சேதுபதி.. லோகேஷின் மாஸ்டர் பிளான்

லோகேஷ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மிகப் பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் லியோ திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் லோகேஷின் கதை மற்றும் விஜய்யின் நடிப்பு. இந்த இரண்டு ஜாம்பவான்கள் இருப்பதால் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதற்காக காஷ்மீரில் 50 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு முடிந்து விட்டது. அடுத்த கட்ட தயாரிப்பு பணிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, சந்தானம் என்ற கேரக்டரில் போதைப்பொருள் வியாபாரியாக நடித்திருந்தார். ஆனால் லியோ படத்தில் இந்த மாதிரியான ஒரு கேரக்டர் வரப்போவதில்லை.

Also read: பெரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வரும் 5 படங்கள்.. விக்ரம் படத்தை விட வசூல் வேட்டையில் உலக நாயகன்

அதற்கு பதிலாக விஜய் சேதுபதியை லியோ படத்தில் டப்பிங் பணிக்காக லோகேஷ் கேட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த வேலைக்கு வெறும் மூன்று நாட்கள் மட்டும் போதும் என்று கேட்டிருக்கிறார். ஏனென்றால் கேமியோ குரலுக்கு விஜய் சேதுபதி கச்சிதமாக பொருந்தும் என்பதால் லோகேஷ் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

இவர்கள் கூட்டணியில் வெளிவந்த விக்ரம், மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மறுபடியும் இணைந்து பணியாற்றுவதை காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும். மேலும் விக்ரமின் கதையை மையமாக வைத்து லியோவின் கதை அமைந்திருப்பதை விஜய் சேதுபதியின் சந்தானத்தின் கேமியோ குரல் மூலம் உறுதிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: பிரபல இயக்குனருடன் 5-வது முறையாக கூட்டணி சேரும் விஜய் சேதுபதி.. தயாரிப்பாளர் யார் தெரியுமா?

மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளிவர இருக்கிறது. ஏற்கனவே லோகேஷ் லியோ படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றையும் அதிக அளவில் பாதுகாத்து வருகிறார். அந்த காரணத்திற்காகவே விஜய் சேதுபதி பற்றி விரைவில் எதையும் வெளியிடாமல் இருந்து வருகிறார். அத்துடன் இந்த திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றன.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த வருடம் அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியிட திட்டமிட்டப்பட்டுள்ளது. இதை உறுதி செய்த நிலையில் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: புது அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்.. பெரிய கேள்விக்குறியில் அடுத்தடுத்து கமிட் ஆன படங்கள்

Trending News