விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர் படத்திற்கு பிறகு அடுத்ததாக லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், கடைசி விவசாயி போன்ற படங்கள் அனைத்துமே ரிலீசுக்கு ரெடியாக காத்துக்கொண்டிருக்கின்றன.
ஆனால் தற்போது வரை எந்த படமும் ரிலீஸாவதாக தெரியவில்லை. தியேட்டர் ரிலீஸ் இல்லை என்றாலும் ஒடிடியிலாவது வெளியாகும் என்று பார்த்தால் அதற்கும் வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது விஜய் சேதுபதியின் படங்கள்.
ஆனால் விஜய் சேதுபதி அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் காக்கா முட்டை படத்தை கொடுத்த மணிகண்டன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதிக்காக பல முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பையும் விட்டு விட்டாராம் மணிகண்டன்.
விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் கூட்டணியில் ஏற்கனவே உருவாகி பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் மாமனிதன். இப்போது வரை அந்த படம் வெளியாவதற்கான எந்த ஒரு சுவடும் தெரியவில்லை.
ஆனால் அந்த படத்தை அப்படியே போட்டுவிட்டு அடுத்த படத்தில் களம் இறங்கி விட்டனர். ஆக மொத்தத்தில் விஜய் சேதுபதி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார் எனவும், படம் ரிலீசை பற்றிக் கருத்தில் கொள்வதில்லை என்ற பேச்சும் கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாகியுள்ளது. காக்கா முட்டை மணிகண்டன் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.
