பாலிவுட்டில் நடிக்க ஆளில்லாமல் கத்ரீனா கைஃப்-க்கு ஜோடியான விஜய் சேதுபதி.. ரிலீஸ் தேதியை லாக் செய்து வெளியிட்ட போஸ்டர்

Vijay Sethupathi – Katrina Kaif: ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பாலிவுட் சினிமா உலகம் தற்போது அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. சில வருடங்களாக பாலிவுட்டில் எடுக்கும் படங்கள் அனைத்தும் தோல்வியையே சந்தித்து வருகின்றன. கோடிக்கணக்கில் பணம் போட்ட தயாரிப்பாளர்கள் அனைவரும் தலையில் துண்டைப் போட்டு விட்டு உட்கார்ந்திருக்கின்றனர். சமீபத்தில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன ஆதிபுரூஷ் திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களாலும் பங்கமாக கலாய்க்கப்பட்டது.

பாலிவுட் சினிமா உலகில் மொத்தமாக சரக்கு தீர்ந்து விட்டது போல், அங்குள்ள நடிகர்களும், இயக்குனர்களும் தங்கள் பார்வையை தென்னிந்திய சினிமா பக்கம் திருப்பி இருக்கின்றனர். தென்னிந்திய படங்களை ரீமேக் செய்து அதிலும் தோற்றுப் போய் விட்ட இயக்குனர்கள், தற்போது தென்னிந்திய நடிகர்களை வைத்து படங்களை எடுக்கவும் ஆரம்பித்து இருக்கிறார்கள்.

Also Read:கிசுகிசுவில் சிக்காத ஒரே நடிகர்.. டீடோட்லராக வாழ்ந்த விஜய் சேதுபதி பட சிரிப்பு வில்லன்

ஏற்கனவே தெலுங்கு சினிமா உலகில் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் கால் பதித்த விஜய் சேதுபதி பாலிவுட்டில் ஃபர்ஸி எனும் வெப் சீரிஸ் மூலம் அறிமுகமானார். தற்பொழுது இவரையே கதாநாயகனாக வைத்து பாலிவுட்டில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்னும் படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தில் பாலிவுட் முன்னணி நடிகை கத்ரீனா கைஃப் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அந்ததுன் படத்தை இயக்கிய ஸ்ரீ ராம் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் மூலம் கத்ரீனா கைஃப் தமிழில் அறிமுகமாகிறார். ஒரே நேரத்தில் இந்தி மற்றும் தமிழில் இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெய் பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் தமிழில் நடிக்கின்றனர். இதே கேரக்டர்களை ஹிந்தியில் சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன், டின்னு ஆனந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

Also Read:வில்லனாக நடிக்க இத்தனை கோடியா.. விஜய் சேதுபதிக்கு வாரி வழங்கிய ஷாருக்கான்

ஏற்கனவே விஜய் சேதுபதி நெகட்டிவ் ரோலில் நடித்து இருக்கும் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கும் நேரத்தில், தற்போது அவர் ஹீரோவாக நடிக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை கொண்டாட்டத்தை திட்டமிட்டு இந்த படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

விஜய் சேதுபதி ஏற்கனவே ஹிந்தியில் நடித்த வெப் சீரிஸ்க்கு அவரே தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் பேசி இருந்தார். இப்போது இந்த படத்திற்கு அவர்தான் பேசியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியானதால், விஜய் சேதுபதிக்கு பாலிவுட்டில் தியேட்டரில் ஸ்மார்ட் எப்படி இருக்கும் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Also Read:மாவீரனை தூக்கி நிறுத்திய விஜய் சேதுபதி.. குரல் கொடுத்ததற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.!