தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக வரவேற்பு பெற்று வந்தாலும் சமீபத்தில் வெளியான ஒரு சில படங்கள் தோல்வி அடைந்தன. அதன் மூலம் தற்போது விஜய் சேதுபதிக்கு படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதாவது அனைத்து விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் சம்பளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு தற்போது நடிப்பின் மீதான ஆர்வம் குறைந்துள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார் மற்றும் அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் வெளியாகின. மூன்று ஏதாவது ஒரு படமாவது ஹிட்டாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் மூன்றுமே டக் அவுட் ஆனது. இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் கடுங்கோபத்தில் உள்ளனர். மேலும் விஜய் சேதுபதி மீது வைத்திருந்த நம்பிக்கையும் குறைந்துள்ளதாக கூறி வருகின்றனர்.
தற்போது லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி சம்பளம் 10 கோடி எனவும் ஹீரோயின் ஸ்ருதிஹாசனுக்கு 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பட்ஜெட் 21 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் படத்தின் தயாரித்த தயாரிப்பாளர் டிஜிட்டல் ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் உட்பட 22 கோடிக்கு படத்தை விற்றுள்ளார். இதன் மூலம் படத்தின் தயாரிப்பாளருக்கு 1 கோடி பக்கம் லாபம் கிடைத்துள்ளது. ஆனால் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் அனைவருக்குமே லாபம் கிடைக்கவில்லை என கூறியுள்ளனர். இதன் மூலம் லாபம் திரைப்படம் லாபம் கொடுக்காமல் நஷ்டம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.