கொரனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றே. ஊரடங்கு தளர்வுகள் அடுக்கடுக்காக கொடுக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன இந்த வார இறுதியில் வெளியிடுவதாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் லாபம் படம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதி்ல் வி.பி.எஃப் பணம் கட்ட முடியாது என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் அது கட்டப்படாத படங்களை எடுப்பதற்கு விநியோகஸ்தர்கள் யோசிப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயற்கை, பூலோகம், பேராண்மை, புறம்போக்கு போன்ற வெற்றிப்படங்களின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.
2வது முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணையும் படம் லாபம். ஆறுமுககுமார் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.
துரதிஷ்டவசமாக இப்படத்தின் இயக்குனர் ஜனநாதன் இவ்வருட மார்ச் மாதம் இறந்துவிடவே ஓ.டி.டியில் வெளியிடவிருந்த படக்குழு தாமதித்தது. ஒரு அருமையான படைப்பை கண்டிப்பாக தியேட்டரில் வெளியிட வேண்டும் என்பதில் படக்குழு தீர்மாணமாக இருக்கவே இப்போது அடுத்த சிக்கல் எழுந்துள்ளது.
இறுதியில் காஞ்ஜூரிங்-3 மற்றும் அரண்மனை-3 படங்கள் வெளியாகவுள்ள நிலையில் இப்போது வரை லாபம் ரிலீசுக்காக வி.பி.எஃப் தொடர்பான பேச்சு வார்த்தைக்கு முடிவு ஏதும் எட்டப்படவில்லையாம். இதனால் லாபம் படம் வெளிவருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.